Breaking News

பருவநிலை மாற்றத்தால் பொருளாதாரம் வெகுவாக சீர்குலையும் : ஆஸ்திரேலிய நிதி ஒழுங்குமுறை ஆணையம் எச்சரிக்கை

Climate change could destabilise the economy Australian Financial Regulatory Commission warns

கடந்த வாரம் APRA எனப்படும் ஆஸ்திரேலிய நிதி ஒழுங்குமுறை ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நிதித்துறை எதிர் வரும் காலத்தில் ஏற்பட உள்ள பருவநிலை மாற்றத்தால் கணிக்க முடியாத அளவுக்கு சவாலானாதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு்ள்ளது.

இதன் காரணமாக இப்போதில் இருந்தே அதற்கான அழுத்தங்கள் தொடங்கி விட்டதாகவும், புவி வெப்பமயமாதல் போன்ற நேரங்களில் சந்தித்ததை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Climate change could destabilise the economy. Australian Financial Regulatory Commission warnsமிகப்பெரிய நிதி அமைப்புகள் அனைத்தையும் எதிர்வரும் ஆபத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு தயார்படுத்த வேண்டும் என்று பிரதமருக்கு APRA அமைப்பின் தலைவர் Wayne Byres தகவல் தெரிவித்துள்ளார். எங்கள் கண்ணோட்டத்தில் நிகழப்போகும் மாற்றத்தையும், சிக்கலையும் அறியாமல் நிதிநிறுவனங்கள் இருப்பதாகவும், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், வைப்பு நிதி அமைப்புகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.

உலக அளவில் நாடுகளின் கொள்கைகள் மாறி வருகின்றன, பருவநிலை மாறி வருகிறது. அது பொருளாதாரம் மற்றும் தொழில்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு மாறி உள்ளது. இந்த அனைத்து மாற்றங்களும் மிக வேகமாக நிகழ்ந்து விட்டன என்றும் Wayne Byres குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசாங்கம் பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் இருந்தே இது போன்ற எச்சரிக்கையை APRA தொடர்ந்து முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் நிதித்துறையில் ஏற்படப் போகும் சிக்கல்கள் குறித்தும் உச்சரித்து வந்தது.

இனிவரும் நாட்களில் நிதி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை APRA வகுத்துள்ளது. அதில், செய்ய வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் செய்யக் கூடாத முதலீடுகள் குறித்தும் விரிவாக பல்வேறு குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இடர்கள் மோசமான நிதித் தடங்கல்கள் நிகழும் என்றும், காப்பீடுகள் திரும்ப பெறும் நடவடிக்கைகள் காரணமாக நிதிச் சங்கிலிகள் பாதிக்கும் என்றும் Wayne Byres குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக ஆஸ்திரேலியாவில் உள்ள சிக்கல், பருவநிலை பிரச்சனையை அரசியல் பின்னுக்குத்தள்ளிவிடும் வகையில் உள்ளது என்று பிரதமருக்கு பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். முதலீட்டாளர்களிடம் நிதிக் கட்டுப்பாடு, வருவாய் மூலதனங்களில் வளர்ச்சி அதிகம் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை போன்ற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆஸ்திரேலிய நிதி அமைப்புகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கி விட்டதாகவும், ஆனால் ஒவ்வொரு நிறுவனங்களுக்குமான தனித்தனியான பருவநிலை மாற்ற சிக்கல்களை எதிர்கொள்ளும் நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் APRA கேட்டுக்கொண்டுள்ளது.

Link Source: https://ab.co/3dQs1Hr