Breaking News

சவுதி அரேபியாவின் காலநிலை மாற்றமும், அகழ்வாராய்ச்சியும் : புலம் பெயர்ந்த மனிதர்கள் – விலங்குகளின் எச்சங்கள் கண்டுபிடிப்பு

Climate change and excavation in Saudi Arabia. Migratory - Animal remains found

சவுதி அரேபியாவின் Arabian Peninsula பகுதிகளில் நடைபெற்று 4-ம் கட்ட அகழாய்வில் பல்வேறு முக்கிய தடயங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. 4 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கை முறை, விலங்குகளின் எச்சம் ஆகியவற்றை கண்டறியும் ஆய்வில் Khall Amayshan 4 ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது.

பல்வேறு காலகட்டங்களை உள்ளடக்கிய 5 வரலாற்று சிறப்புமிக்க ஏரிப் படுகைகளில் பேராசிரியர் Petraglia தலைமையில் ஆய்வு நடைபெற்று வருகிறது.

Climate change and excavation in Saudi Arabia. Migratory - Animal remains foundsபெனிசுலா தடங்களில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை சர்வதேச நிபுணர் குழு உறுதி செய்துள்ளது. இதே படுகைகளில் யானை உள்ளிட்ட விலங்குகளின் எச்சங்களும், அதன் தடயங்களும் இருப்பதாக குழுவில் இடம்பெற்றுள்ள ஆராய்ச்சியாளர் Julien Louys கூறியுள்ளார். இதில் நீர்யானைகளின் புதைபடிமங்களும் இருப்பது ஆச்சர்யம் அளிப்பதாக ஆராய்ச்சி குழுவினர் தெரிவித்துள்ளனர். அரேபிய நிலங்கள் மிகவும் ஈரத் தன்மையோடு இருந்த காலகட்டத்தில் அவை இங்கே வந்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் வித்தியாசமான கல் கருவிகளும் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது அந்த காலகட்டத்தின் சமூக சூழலை அறியும் வகையில் இருப்பதாகவும் Julien Louys கூறியுள்ளார்.

Climate change and excavation in Saudi Arabia. Migratory - Animal remains found.ஆப்ரிக்காவில் இருந்து வெளியேறி பசுமையாக இருந்த அரேபியாவுக்கு வந்தவர்களின் தடங்கள் வரலாற்று கால அடையாளமாக பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், அவை கல் கருவிகளில் குறிக்கப்பட்டு இருப்பதாகவும் பேராசிரியர் Petraglia தெரிவித்துள்ளார். இன்னும் பல்வேறு கட்ட அகழாய்வுகளில் பசுமையான அரேபியாவின் வாழ் நிலைகள், விலங்குகள், மனிதர்களின் எச்சங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் சர்வதேச ஆராய்ச்சிக்குழு தெரிவித்துள்ளது.

Link Source: https://ab.co/3n6tXR8