Breaking News

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நடைபெற்ற மோதல் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவம் : 4 ஆண், ஒரு பெண் உட்பட 5 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை

அடிலெய்ட் பகுதியின் எலிசபத் வேலி – Wallace சாலை பகுதியில் இருந்து காவல்துறைக்கு வந்த அழைப்பின் பேரில் அங்கு சென்ற நிலையில், கடுமையான வாக்குவாதம் மற்றும் துப்பாக்கி சத்தம் கேட்டதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து விரைந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் முக்கிய சாலை சந்திப்பில் இரண்டு கார்கள் வேகமாக செல்வதை கவனித்தனர்.

சில்வர் நிற BMW காரில் இருந்து துப்பாக்கியால் சுடுவதும் மற்றொரு கருப்பு நிற செடான் காரில் இருந்து தாக்குதல் நடத்துவதும் நடந்ததை கண்ட காவல்துறையினர் அந்த வாகனங்களை துரத்திச் சென்றனர்.

வடக்கு பிரதான சாலையில் அவர்களை கைது செய்த போலீசார் உரிமம் இல்லாத துப்பாக்கி வைத்திருந்த நபரை கைது செய்தனர். மேலும், இதே போன்று அந்த பகுதியில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Clashes and shootings in Adelaide, Australia. Police arrest 5 people, including 4 men and a woman.Elizabeth Park home பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மோதல் சம்பவத்தில் பயன்படுத்திய துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காவலர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்காததால் 37 வயதான நபரை கைது செய்தனர். மேலும், சில மணி நேரங்களுக்கு எலிசபெத் வேலி பகுதியில் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில் ஈடுபட்ட 39 வயதான நபரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதே போன்று Smithfield Home பகுதியில் 36 வயதான பெண் ஒருவரையும் ஆயுதங்களை பயன்படுத்தியதாக கூறி போலீசார் கைது செய்துள்ளனர். இதனை அடுத்து 4 ஆண்கள் ஒரு பெண் கைது செய்யப்பட்டள்ள நிலையில் இந்த மோதல் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சிசிடிவி கேமராக்கள் மற்றும் DashBoard கேமரா காட்சிகளை கைப்பற்றி சம்பவத்தில் ஈடுபட்ட வாகனங்கள் மற்றும் நபர்கள் குறித்து புலனாய்வுக் குழு விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் பொதுமக்கள் யாருக்கும் காயமோ, பாதிப்போ ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். நடைபெற்ற அனைத்து சம்பவங்கள் மற்றும் நபர்கள் அனைத்தும் தொடர்புடையதாக உள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ள 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக அடிலெய்ட் காவல்துறை தெரிவித்துள்ளது.

Link Source: https://ab.co/35cCPxD