Breaking News

Claremontஇல் 3 பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ! 20 வருடங்களுக்கு பிறகு விடை கிடைத்துள்ளது! இவர் தான் அந்த சீரியல் கில்லர்!

1996ன் Claremontஇல் 27 வயது இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போனது பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்தவை தொடர்ந்து பல கடைகளின் முகப்புகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு ஆஸ்திரேலியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

வெறும் 27 வயதே நிரம்பிய இளம் பெண் Sarah Spiers ஜனவரி 26 ஆம் தேதி ஆஸ்திரேலியன் டே – வை பிரபல கிளப்பில் நண்பர்களுடன் கொண்டாடிய நிலையில் அன்று இரவே மர்மமான முறையில் காணாமல் போனார்.

ஒரு ஆஸ்திரேலியா தினத்தை நண்பர்களுடன் மிக மகிழ்ச்சியாக கொண்டாடிய Sarah Spiers அந்த கிளப்பிற்கு அருகிலுள்ள டெலிபோன் பூத்திருக்கு சென்று டாக்ஸியை அழைப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு கண்ணிமைக்கும் நேரத்தில் நின்று கொண்டிருந்த Sarah Spiers திடீரென மறைந்து போக அங்கிருந்த மக்கள் பலரும் வெகுநேரமாக பயத்தில் இருந்தனர்.

இவ்வாறு Sarah Spiers தொலைந்துபோய் ஆறு மாதங்கள் ஆகியும் அதை பற்றி எந்த ஒரு தகவலும் போலீசாருக்கு கிடைக்காத நிலையில், மீண்டும் ஜூன் 9ஆம் தேதி சுமார் 23 வயது நிரம்பிய Jane Rimmer என்ற மற்றொரு பெண்ணும் அதேபோன்று வேறொரு ஹோட்டலில் இரவு விருந்தில் கலந்து கொண்டு டாக்ஸிக்காக நின்று கொண்டிருந்த பொழுது திடீரென காணாமல் போனார்.

இவ்வாறு சில மாத இடைவெளியில் அடுத்தடுத்த பெண்கள் காணாமல் போக மீண்டும் 27 வயது மதிக்கத்தக்க வழக்கறிஞர் பெண்மணி Ciara Glennon என்பவர் 1997ம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி இரண்டாவது பெண் காணாமல் போன அதே ஹோட்டலில் இருந்து வெளியே வந்த உடன் காணாமல் போனார்.

இவ்வாறு இளம் பெண்கள் தொடர்ந்து காணாமல் போக ஆஸ்திரேலியன் போலீசாருக்கு பெரும் தலைவலியாக அமைய இதைப்பற்றி தேடித் திரிந்த அவர்கள் இதை யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறி வந்தனர்.

இதற்கிடையில் Sarah Spiers வின் உடல் மட்டும் இன்றுவரை கிடைக்காமல் போக, மற்ற இரு பெண்களின் உடல்களும் காணாமல் போன அடுத்தடுத்த மாதங்களிலேயே கிடைத்தன.

இவ்வாறு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளை கடந்தும் இந்த மூன்று இளம் பெண்களின் கொலைகள் எப்படி நடந்தது, ஏதாவது சீரியல் கில்லர்கள் இதை செய்திருப்பார்களா என போலீஸ் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தது.

முதலில் Sarah Spiers காணாமல் போன போது இது வெறும் காணாமல் போன வழக்கு தான் விரைவில் கண்டுபிடித்து விடலாம் என போலீசார் நினைத்து நிலையில் ,அவரது குடும்பத்தார் பலரும், அதை ஒப்புக் கொள்ளாமல் உடனடியாக ஊடகங்களின் வாயிலாகவும் பல்வேறு பொது இடங்களில் போஸ்டர்கள் உள்ளிட்டவைகளை ஒட்டியும் மிக தீவிரமாக தேடி வந்தனர்.

அதன் பின் அடுத்தடுத்து இரண்டு பெண்கள் காணாமல் போக சுதாரித்துக்கொண்ட WA போலீஸ் தகுந்த ஸ்பெஷலிஸ்ட் வைத்து கொலையாளியை கண்டுபிடிக்க தீவிர இன்வெஸ்டிகேஷனில் ஈடுபட்டது. இந்நிலையில் Rimmer-ன் உடல் ஆகஸ்ட் 3 1996 ஆம் ஆண்டு bushland என்ற இடத்தில் தெற்கு பகுதியிலும், Glennon-ன் உடல் ஏப்ரல் 3ஆம் தேதி 1997 ஆம் ஆண்டு அதே bushland என்ற இடத்தில் வடக்கு பகுதியிலும் கண்டெடுக்கப்பட்டது. மேலும் இதைப்பற்றிய பல்வேறு விசாரணைகள் ரகசியமாக பாதுகாக்கப்பட்டது.

1998 ஆம் ஆண்டு இரண்டு பேரின் உடலும் கிடைக்க அதன்மூலம் போலீசாருக்கு ஒரு நல்ல யோசனை தோன்றியது எனினும் கிடைத்த யோசனையை யாரிடமும் சொல்லாமல் கப்சிப் என ரகசியம் காத்து வந்தனர். இந்நிலையில் இந்த தொடர் கொலையில் எத்தனை கொலையாளிகள் சம்பந்தப்பட்டு உள்ளனர், எந்த மாதிரியான ஆயுதங்களை பயன்படுத்தி அவர்களைக் கொன்றனர், என எந்த ஒரு தகவலும் இல்லாமல் மிக அமைதியாகவே இந்த வழக்கு சென்றது.

இந்நிலையில் போலீசார் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் சந்தேகமும் டாக்சி டிரைவரின் மீது இருந்த நிலையில், ஆயிரக்கணக்கான டாக்ஸி டிரைவர்களை அதிரடியாக சோதனையிட்டு அவர்களது டிஎன்ஏ-களை சேகரித்து சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இருப்பினும் எந்த ஒரு பயனும் அளிக்கவில்லை.

இவ்வாறு பல ஆண்டுகள் கடந்து போக Macro Taskforce சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை மிகத்தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கினர். அதன் அடிப்படையில் Hollywood hospital-லில் Telstra டெக்னீசியனாக பணியாற்றிய Bradley Robert Edwards என்பவர் அணிந்திருந்த யூனிபார்மில் பதிந்திருந்த டிஎன்ஏ-வும் இறந்த பெண்களின் உடல்களில் இருந்த டிஎன்ஏ-வும் ஒத்துப்போக பல ஆண்டுகளாக இந்த வழக்கு நீண்டுகொண்டே செல்ல இப்போது 24 செப்டம்பர் 2020 அன்று Bradley Robert Edwards தான் அந்த 3 பெண்களையும் கொலை செய்த சீரியல் கில்லர் என விசாரணையின் முடிவில் தீர்ப்பளிக்கப்பட்டு இந்த வழக்கு முடிக்கப்பட்டது.