Breaking News

Christmas Island-ல் தடுப்புக்காவலில் உள்ள Biloela குடும்பத்திற்கு குவியும் பரிசுகள் !

Priya Murugappan, அவருடைய கணவர் Nades மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த 2 மகள்கள் Kopika (5) மற்றும் Tharunicaa (3) , இவர்கள் அனைவரும் Indonesia கடற்கரையிலிருந்து 150 கி.மீ. தூரம் உள்ள தீவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தம்பதிகள் கடந்த 2012 -ம் ஆண்டு ஒரு புது வாழ்க்கையைத்தேடி Sri Lanka-விலிருந்து Queensland மாகாணத்தில் உள்ள சிறிய நகரமான Biloela வந்தடைந்தனர். தண்டிக்கப்படுவோம் என்ற அச்சத்தினால் திரும்பிச்செல்ல முடியாமல் 1000 நாட்களுக்கு மேலாக இங்கு தடுப்புக்காவலில் உள்ளனர்.

criminal குற்றம் சுமத்தப்பட்ட 100-க்கும் மேற்ப்பட்டவர்களுடன் தடுப்புக்காவலில் இங்கு வசிக்கின்றனர்.இந்த தம்பதியரின் இளைய மகள் Tharunicaa தடுப்புக்காவலைத்தாண்டி நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை இதுவரை கண்டுகளித்தது இல்லை என்பது வேதனையான விஷயமாகும்.

இவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் ஆஸ்திரேலியாவின் பல பகுதியில் வசிக்கும் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய செய்தது. இந்த தமிழ் குடும்பத்தை இந்த தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று இவர்கள் Home Affairs Minister Peter Duttonனிடம் முறையிட்டனர். அனேக மக்கள் இந்த குடும்பத்திற்கு தேவையான உதவிகள் செய்ய முன் வருகின்றனர் எனவும் அவர்களுடைய ஆறுதல் வார்த்தைகள் கண்டு மனம் நெகிழ்கின்றது எனவும் குடும்ப நண்பர் Angela Frederiks தெரிவிக்கிறார்.

இந்தோனேசியாவுக்கு அருகே உள்ள ஒரு தீவில் இவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதால், வாரத்திற்கு இருமுறை மட்டுமே இவர்களுக்கு மெயில் அனுப்ப முடியும் . வரும் வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தேவையான பொருட்கள் அனுப்பப்பட இருக்கிறது என தெரிகிறது.

Christmas Island-க்கு அனுப்பப்படும் மெயில் மற்றும் பார்சல்கள் அனுப்புதலில் எந்தத் தாமதமும் இருக்காது என ஆஸ்திரேலியா Post spokesperson தெரிவித்தார். இருந்தாலும் இக்குடும்பத்தின் ஆதரவாளர்கள் கிறிஸ்துமஸுக்கு முன்பாகவே அனைத்து பொருட்களும் இவர்களுக்கு கிடைக்கும் படி விரைவு தபால் மூலம் அனுப்புமாறு மக்களை கேட்டுக் கொண்டனர்.

கையால் செய்யப்பட்ட பொம்மைகள் மற்றும் பல பரிசுகள் அனுப்பப்படுகின்றன. ஷாப்பிங் செல்ல முடியாமல் தவிக்கும் அந்த சிறு குழந்தை கோபிகாவுக்கு இந்த அழகான பொருட்களை பார்க்கும்போது தன் ஆசை நிறைவேறும் என்று கூறுகிறார்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன், Santa-உடன் எடுக்கும் புகைப்படம் போன்ற சிறு விஷயங்கள் கூட இவர்களுக்கு கிடைப்பதில்லை. இது அவர்களுக்கு மிகுந்த மன வேதனை உண்டாக்கும்.

இவர்கள் எங்கே சென்றாலும் பாதுகாவலர்களுடன் தான் செல்ல முடியும். கோபிகா பள்ளிக்கு செல்லும் போது கூட பாதுகாவலர்கள் இவர் கூடவே சென்று வருகின்றனர். நண்பர்களை பார்ப்பதற்கும் அவர்களை தங்களுடைய வீட்டிற்கு அழைத்து உபசரிக்கவும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பள்ளிக்கு செல்லவும் ஷாப்பிங் செல்லவும் மற்றும் அப்பாவின் காரில் செல்லவும் எனக்கு பிடிக்கும். ஆனால் இங்கு இப்படி செல்ல பிடிக்கவில்லை என்று வேதனையுடன் கோபிகா தெரிவித்திருந்தார்.

குடும்பத்தின் எதிர்காலம் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இருக்குமென்று தெரிகிறது. இந்த நீதிமன்றம் தருணிகாவிற்கு மறுக்கப்பட்ட நடைமுறையை நியாயத்தை பற்றி விசாரிக்கின்றனர். ஏப்ரல் மாதம் தருணிக்காவிற்கு நடைமுறை நியாயம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் வழங்கப்படவில்லை.

தருணிக்கா VISA விண்ணப்பிக்க இருக்கும் தடையை நீக்குவதை பற்றி இந்த அரசு யோசிக்கும் என்று Immigration Minister David Coleman தெரிவித்திருந்தார். தடுப்புக்காவலில் இக் குடும்பம் தங்கி இருக்கும் சூழ்நிலையை Australian Border Force அடிக்கடி கண்காணிக்கிறது.
கல்வி மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் உட்பட அனைத்து ஆரோக்கியம் மற்றும் நலன் சேவைகள் இவர்களுக்கு வழங்கப்படுகிறது என்றும், பிக்னிக் , நடனம் மற்றும் யோகா வகுப்புக்கு இவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் சட்டரீதியாக உள்ள சில முக்கியமான பிரச்சனைகளை பற்றி பேசுவது பொருத்தமற்றதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.