Breaking News

பிரதமர் ஸ்காட் மாரிசன் தன்னுடைய தரப்பு நியாத்தை கேட்காமலேயே தன்மீது பொது வெளியில் விமர்சனைத்தை வைத்துள்ளது மிகவும் தரம் தாழ்ந்த செயல் என்று Christine Holgate விம்ர்சனம் செய்துள்ளார்.

Christine Holgate

ஆஸ்திரேலிய போஸ்ட் என்பது ஆஸ்திரேலிய நாட்டின் அரசு சார்பாக இயங்கக்கூடிய ஒரு தபால் சேவை வழங்கும் நிறுவனமாகும்.

இந்த நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்தவர் Christine Holgate.

ஆஸ்திரேலிய போஸ்ட் நிறுவனத்தில் ஒரு ஒப்பந்ததை நிறைவு செய்ததற்காக ஆஸ்திரேலிய போஸ்ட் நிறுவனத்தில் பணி புரிந்த மூத்த நிர்வாகிகள் நான்கு பேருக்கு விலை உயர்ந்த Cartier watch பரிசலிக்கப்பட்டதாக வெளியான செய்தி அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த ஒப்பந்தம் Bank@post என்று அழைக்கப்பட்டாலும் இந்த ஒப்பந்தம் குறித்த முழு விவரமும் வெளியிடப்படவில்லை.

இந்த குற்றச்சாட்டு குறித்து கடந்தாண்டும் செனட் அவையில் விவாதிக்கப்பட்டது.

Prime Minister Scott Morrison newஅப்போது இந்த விவகாரம் குறித்து கேள்வி நேரத்தில் பதிலளித்த ஆஸ்திரேலிய பிரதமர் Scott Morrison, இது ஒரு அவமானகரமான செயல் என்று தெரிவித்தார். மேலும் Holgate அவர்களை பதவியில் இருந்து விலக அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

அவர் விலக விரும்பவில்லை என்றால் பிரதமரை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டதாகவும் செனட் அவையில் தெரிவிக்கப்பட்டது.

இவ்விவகாரம் குறித்து முதல்முறையாக மவுனம் கலைத்துள்ள Holgate பிரதமரின் கருத்து பொது வெளியில் தன்னை தூக்கிலிட்டது போன்றது என்றும் மிகவும் அருவருப்பான செயல் என்றும் விமர்சனம் செய்துள்ளார்.

மருத்துவ காரணங்களுக்காக ஒய்வில் இருந்த தான் தற்போது தான் பிரதமரின் நாடாளுமன்ற உரையை முழுமையாக கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசின் வர்த்தக ஆலோசனை குழுவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் தன் மீது குற்றச்சாட்டை சுமத்துவதற்கு முன்பு தன்னுடைய கருத்தை அறிய பிரதமர் முயற்சிக்கவில்லை என்பது ஆச்சர்யமளிப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இவ்விவகாரம் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் Holgate தெரிவித்துள்ளார்.

இந்த முறைகேடு குற்றச்சாட்டு குறித்து செனட் அவையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் அரசு சார்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை பொதுவெளியில் வெளியிடவில்லை.

Lucio Di Bartolomeoஇந்த முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆஸ்திரேலிய போஸ்ட் தலைவர், Lucio Di Bartolomeo, கும் முக்கிய பங்கு உள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள Australia post இந்த பரிசு விவகாரம் சர்ச்சையானதை தொடர்ந்து Holgate தானாக முன்வந்து பதவி விலகளை அறிவித்ததாகவும், தெரிவித்துள்ளது.
ஆனால் இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று Holgate மறுப்பு தெரிவித்துள்ளார்.