Breaking News

Christchurch மசூதியில் நடைபெற்ற கலவரத்தை பற்றிய அறிக்கையில் உள்ள தவறுக்காக Jacinda Ardern மன்னிப்பு கோரினார் !

18 மாதங்களாக தயாரிக்கப்பட்ட 792 பக்கம் கொண்ட அறிக்கை கடந்த செவ்வாய் அன்று வெளியிடப்பட்டது .இந்த அறிக்கையின் மூலம் பல தவறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு முன்பு, தீவிரவாத தாக்குதலை பற்றி சரியான முறையில் விசாரிக்க நியூசிலாந்து உளவுத்துறை தவறிவிட்டது. துப்பாக்கி உரிமம் வழங்கியதில் சில பிரச்சினைகள் இருந்ததாகவும் ,இந்த தாக்குதலை முன்கூட்டியே எந்த ஒரு அதிகாரிகளும் தெரியவில்லை என்றும் இந்த அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

Al Noor மசூதி மற்றும் Linwood Islamic Centre-ல் ,துப்பாக்கி ஏந்திய ஒரு தனி மனிதன் நடத்திய தாக்குதலில் 51 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 12க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

துப்பாக்கி உரிமம் வழங்குவதில் மாற்றம் உட்பட 44 பரிந்துரைகளை இந்த அறிக்கை உருவாக்கியுள்ளது. தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு ஒரு அமைச்சரை நியமிக்கவும், இந்த பயங்கரவாத தாக்குதலைப் பற்றி விசாரணை செய்ய மேலும் நிதி ஒதுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அறிக்கையில் குறிப்பிடப்பட தகவல்கள் மிகவும் அதிர்ச்சியை உண்டாக்குவதாகவும் ,அதில் கூறப்பட்ட பரிந்துரைகளை நாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும் Christchurch முஸ்லிம் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். வெறுப்பு பேச்சு மற்றும் குற்றங்களினால் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது சரி என Abdigani Ali, spokesperson for the Muslim Association of Canterbury கூறுகிறார்.

வரும் மார்ச் மாதத்திற்குள் இந்த அறிக்கை குறிப்பிட்ட அனைத்து பரிந்துரைகளையும் இந்த அரசு அமல்படுத்தும் என New Zealand Prime Minister Jacinda Ardern தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தான் மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பல வருடங்களாக பயங்கரவாத தாக்குதல் நடைபெறப்போகும் என்ற கவலையினை முஸ்லிம்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் இந்த பயங்கரவாத தாக்குதலை தடுப்பதற்கான எந்த ஒரு வழிமுறைகளையும் இந்த குழு கண்டறியவில்லை. இருந்தபோதிலும் இந்த அரசின் சார்பாக இந்த தவறுக்காக முழு பொறுப்பையும் ஏற்று மன்னிப்பு கோருகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை மேற்பார்வையிட New Zealand’s Minister of Security Intelligence Services, Andrew Little நியமிக்கப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார். அந்த பயங்கரவாதி, பயங்கரவாத சம்பந்தப்பட்ட வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த அறிக்கையின் மூலம் தெளிவாக தெரிவது என்னவென்றால் நியூஸிலாந்து முஸ்லிம் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாகும். இதைப்பற்றி Prime Minister Scott Morrison-னுடன் இவர் கலந்து பேச உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு முழு பொறுப்பேற்று மன்னிப்பு கோருவதாக New Zealand Police Commissioner Andrew Coster தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பயங்கரவாத தாக்குதலில் ஏற்பட்ட இந்த தவறுக்கு அரசு தெரிவித்த மன்னிப்பை நியூஸிலாந்து மனித உரிமைகள் ஆணையம் வரவேற்கிறது.

கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு பிறகு இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது .நெருங்கிய சொந்தங்கள் மற்றும் உறவினர்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு இந்த தாக்குதலுக்கான காரணத்தை தெரிந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது .கடந்த மாதம் இந்த அறிக்கை Governor-General Dame Patsy Reddy-யிடம் ஒப்படைக்கப்பட்டது .

இந்த அறிக்கையை தயார் செய்ய பங்களித்தவர்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவிப்பதாகவும் ,இந்த அறிக்கை மூலம் கண்டறியப்பட்ட விஷயங்கள் மற்றும் பரிந்துரைகள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாறும் Commissioner William Young தெரிவித்தார் . ஒரு முழுமையான அறிக்கை தயாரித்த குழுவினருக்கு தங்களுடைய நன்றியை தெரிவிப்பதாகவும் மற்றும் நியூசிலாந்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களின், இந்த பரிந்துரைகளை பற்றிய கருத்துக்கள் பெறப்படும் என்றும் Masjid Al-Noor mosque Imam Gamal Fouda தெரிவித்தார்.