Breaking News

ஆஸ்திரேலியாவின் வடக்கு பிராந்திய காவல் அதிகாரி மீதான குடும்ப வன்முறை வழக்கு : குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டார் அதிகாரி Chris Tencate

ஆஸ்திரேலியாவின் வடக்கு பிராந்தியமான Alice Springs ல் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வடகிழக்கு ஊரக பகுதியான Arlparra வசித்து வந்தவர் காவல் அதிகாரி Chris Tencate.

Chris Tencate acquitted of domestic violence.இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளிடம் வன்முறையில் ஈடுபட்டதாகவும் அவர்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாகவும், துப்பாக்கியால் சுட்டு விடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் புகார் எழுந்தது இதுதொடர்பாக வழக்கு விசாரணை Alice Springs உள்ளூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பல்வேறு ஆதாரங்கள் குறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம் காவல் அதிகாரி Chris Tencate மனைவி Michelle Du Toit, கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி நீதிமன்றம் காவல்துறை அதிகாரியை குற்றமற்றவர் என்று விடுவித்தது.

இந்நிலையில் தான் மற்றும் தன்னுடைய குழந்தையின் எதிர்காலம் குறித்து தான் மிகவும் அச்சமுற்று இருப்பதாகவும் இதற்கான தீர்வு நீதிமன்றத்தால் வழங்கப்படவில்லை என்றும்
Michelle Du Toit கூறியுள்ளார்.

Chris Tencate acquitted of domestic violence..குற்றம் சாட்டப்பட்ட காவல் அதிகாரி Chris Tencate மற்றும் காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட ஆதாரங்கள் நீதிமன்றத்திற்கு போதுமானதாக இருந்ததாகவும், அவற்றை ஏற்றுக்கொண்டு காவல்துறை அதிகாரி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபணமற்றவை என்றும் தீர்ப்பளித்த நீதிபதி Bamber கூறினார். பல்வேறு காலகட்டங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் அதற்கான உரிய ஆதாரங்கள் இல்லை என்றும், மனைவியின் வாய்வழி குற்றச்சாட்டுக்கள் மூலமாக விசாரணையை நீட்டிக்க முடியாது என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் இந்த புகார்கள் தொடர்பாக காவல்துறை தனது துறை ரீதியான விசாரணையை காவல்துறை அதிகாரி Chris Tencate குறித்து தொடர்ந்து நடத்தும் என்று கூறப்படுகிறது.

Link Source: https://ab.co/3BG3wWb