உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 14-வது நாளை எட்டியுள்ள நிலையில் அங்கு நீடித்து வரும் பதட்டம் காரணமாக, உக்ரைன் தனது உச்சபட்ச கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்று சீன அதிபர் Xi Jinping கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இடைவிடாத குண்டு மழையால் பற்றி எரியும் உக்ரைனைக் கண்டு வேதனை அடைந்ததாகவும் அதிபர் Xi Jinping கூறியுள்ளார்.
உக்ரைன் மீதான போர் தொடர்பாக ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் அதிபர்களுடன் காணொளி வாயிலாக சீன அதிபர் ஆலோசனை நடத்தினார். அப்போது ரஷ்யா மீது பல்வேறு உலக நாடுகள் மேற்கொண்டுள்ள பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் ராணுவம் நிதிச் செலாவணி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
உக்ரைனில் நடைபெற்று வரும் தாக்குதல்கள் தொடர்ந்து கவலை அளிக்கும் விதமாக இருப்பதாகவும் போர் தாக்குதல்களிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான கட்டுப்பாட்டு சூழலை கைவிட்டு விட்டதாகவும் அதிபர் Xi Jinping கூறியுள்ளார். அதே நேரத்தில் தற்போது உள்ள உறுதித் தன்மை யோடு தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை, எரிபொருள் பரிமாற்றம், போக்குவரத்து பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை சரி செய்வதற்காக உரிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறு பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி அதிபர்களை சீன அதிபர் Xi Jinping கேட்டுக்கொண்டார். உக்ரைன் மீதான போர் தொடங்கியதிலிருந்தே எந்தவித கடுமையான எதிர்ப்புகளையும் ரஷ்யா மீது தெரிவிக்காத சீனா தற்போது போரை நிறுத்துவதற்கு உதவி செய்வதாகவும், உக்ரைன் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது உலக நாடுகள் மத்தியில் பேசு பொருளாகி உள்ளது.
பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் போது பல்வேறு விவகாரங்களில் துணை நிற்பதாக ரஷ்யாவிடம் தெரிவித்திருந்த சீனாவுக்கு தற்போது இந்தப் போர் சூழல் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதேநேரத்தில் உக்ரைனில் போர் நிறுத்தத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்பு சீனாவிடம் இருப்பதாகவும் இந்த விவகாரத்தில் பெருமளவு தங்களது பங்களிப்பை செலுத்துவதற்கான வாய்ப்பு சீனாவுக்கு ஆனது என்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு விவகாரத்திலும் சீனாவிற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் அதை அவர்கள் பயன்படுத்தவில்லை என்றால் உக்ரைன் ரத்தக்களறி ஆகவே தொடரும் என்றும் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.
அண்டை நாடுகளை நிராயுதபாணி ஆக்கி அவர்களை கைப்பற்றுவதற்கான ஒரு சிறப்பு நடவடிக்கையாக இந்த போரை ரஷ்யா அழைத்து வருவதாகவும் ஆனால் 44 மில்லியன் மக்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும் புதிய நாஜி தலைவர்கள் என்று அழைக்கப்படும் நபர்களை அழிக்கவே இந்த நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொண்டு வருவதாக மேற்கத்திய நாடுகள் கூறியுள்ளன.
Link Source: https://ab.co/3KvlNuc