Breaking News

ஆக்கஸ் ஒப்பந்தம் காரணமாக மாகாணங்களில் அமைதி சீர்குலையும் – எல்லைகளில் நிலைத்தன்மை பாதிக்கும் : சீன வெளியுறவுத் துறை அமைச்சர் Wang Yi எச்சரிக்கை

Chinese Foreign Minister Wang Yi warns that the AUKUS Agreement will disrupt peace in the provinces and affect border stability.

அமெரிக்கா பிரிட்டன் ஆஸ்திரேலியா இடையே போடப்பட்டுள்ள ஆக்கஸ் ஒப்பந்தம் சர்வதேச எல்லைகளில் நிலைத்தன்மையை பாதிப்பதுடன் மாகாணங்களில் மறைமுகமாக அமைதியை சீர்குலைக்கும் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் Wang Yi கூறியுள்ளார்.

ஐரோப்பிய யூனியன் மற்றும் சீனா இடையிலான உயர்மட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்ற சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் ஐரோப்பிய யூனியன் வெளியுறவுத் துறை தலைமை செயலாளர் Josep Borrell கூட்டத்தில் பங்கேற்றார்.

Chinese Foreign Minister Wang Yi warns that the AUKUS Agreement will disrupt peace in the provinces and affect border stabilityஅணுவாயுத நீர்மூழ்கிக் கப்பல் பயன்படுத்தும் விவகாரத்திற்கு சீனா தொடர்ந்து பல்வேறு முறை கண்டனம் தெரிவித்து வருகிறது. அந்த வகையில் இந்தக் கூட்டத்திலும் ஆஸ்திரேலியா சீனாவுடனான உறவை மேம்படுத்துவதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் Wang Yi கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய தரப்பில் இருந்து இரு நாட்டு உறவுகளை தொடர்வதற்கும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று தாங்கள் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நீர்மூழ்கி கப்பல் விவகாரத்தை தவிர்த்து மற்ற பல்வேறு விவகாரங்களில் ஆஸ்திரேலியா சீனா இடையிலான உறவில் பரஸ்பரம் நம்பிக்கை பாதிக்கப்பட்டதாகவும், கொரோனா, பொருளாதார போர், சர்வதேச பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் தாங்களும் உரிய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் Wang Yi தெரிவித்துள்ளார்.

Chinese Foreign Minister Wang Yi warns that the AUKUS Agreement will disrupt peace in the provinces and affect border stability..இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரிட்டனுக்கான சீன தூதர் Zheng Zeguang கலந்து கொண்டு பேசினார். அப்போது, பொருளாதார சீர்குலைவு மற்றும் சர்வதேச எல்லைப் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் உலக நாடுகளுடன் இணைந்து பயணிப்பதில் சீனா தவறிவிட்டதாக குறிப்பிட்டார். கூட்டு மனப்பான்மையோடு சீனா மற்ற நாடுகளை அரவணைத்துச் செல்வதே பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வழி என்றும் அவர் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் சீனாவில் அறிவுசார் நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் விஞ்ஞானிகள் அதிக அளவில் உருவாவது தற்போதைய காலத்தின் தேவை என்று அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3kSXeNE