Breaking News

ஆஸ்திரேலிய துறைமுகங்களை குறிவைக்கும் சீன ராணுவம் : வெளியுறவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர், கடல் எல்லைப்பகுதிகளில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும், இதனிடையே சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாகவும் பீட்டர் டட்டன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்காக உயிர்த்தியாகம் செய்த வீர்ரகளின் பங்கு அளப்பரியது என்று புகழாரம் சூட்டிய பீட்டர், அவர்கள் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளை மீட்டுக் கொடுத்திருக்கிறர்கள் என்றும் கல்லிபோலி போரை நினைவு கூர்ந்தார். ஆஸ்திரேலியா தனது தேசிய பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் பீட்டர் குறிப்பிட்டார்.

Chinese army targeting Australian ports Foreign Minister Peter Dutton warnsதொடர்ந்து பேசிய அவர், நமது எல்லைப்பரப்பில் ஏற்படக்கூடிய மாற்றங்களை நாம் உணர வேண்டும் என்றும், சீனா அத்துமீறி நமது எல்லைப்பகுதிகளில் உள்ள துறைமுகங்களை ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், இதுவே நாம் கவனம் செலுத்த வேண்டிய புதிய பிரச்சனை என்றும் பீட்டர் கூறினார்.

சர்ச்சைக்குரிய உள்கட்டமைப்பு வளர்ச்சி ஒப்பந்தத்தை விக்டோரியா அரசு சீனாவுடன் மேற்கொண்டு அதற்கு மத்திய அரசு தடை விதித்ததையும் அவர் மேற்கோள் காட்டினார். மேலும், இந்த நடவடிக்கையை காரணமின்றி ஆஸ்திரேலிய அரசு மாகாண அரசுகளை சீனாவுக்கு எதிராக தூண்டிவிடுகிறது என்று சீனத்தரப்பில் வந்த தகவலையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். சீனா – ஆஸ்திரேலியா இடையிலான உறவில் மனப்பூர்வமாக செயல்படும் நிலையில் ஆஸ்திரேலிய அரசு எல்லை என்பதையே நடக்கும் நிகழ்வுகள் காட்டுவதாக தெரிகிறது.

கடந்த ஒராண்டுக்கு முன்னர் ஆஸ்திரேலிய ஏற்றுமதி வர்த்தகத்திற்கு அனுமதி அளிக்காமல் முடக்கியதால் ஏற்பட்ட பில்லியன் டாலர் இழப்பு குறித்தும, இது தொடர்பாக சர்வதேச விசாரணக்கு ஆஸ்தரேலியா அழைப்பு விடுத்ததும் முக்கியமான ஒன்று. பெருந்தொற்று காலத்தில் இது போன்ற விசாரணைகளை தொடர, வெளிநாட்டு தலையீடுகளை தவிர்க்க சட்ட ஆணையம் ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சரின் எச்சரிக்கைகள் சமீப நாட்களில் எல்லைகளில் அதிகரித்து வரும் பதற்றத்தை வெளிக்காட்டும் வகையில் உள்ளதால் அதற்கான உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலையில் ஆஸ்திரேலியா உள்ளது.

Link Source: https://bit.ly/3aHWfdM