Breaking News

சீனா சாலமன் தீவு இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பான விவகாரம் : ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு Micronesia கூட்டாட்சி மாநிலங்கள் கோரிக்கை

China's Solomon Islands Security Agreement. Micronesia Federal States call for reconsideration of agreement

பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதை பல்வேறு நாடுகள் சுட்டிக் காட்டி வரும் நிலையில் சாலமன் தீவில் மற்றும் சீனாவுக்கு இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. புகைப்படங்களுடன் கூடிய பல்வேறு செய்திகள் தொடர்ந்து வெளியாகி இந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பசுபிக் பிராந்தியத்திலுள்ள 4 தீவு மாகாணங்களை உள்ளடக்கிய கூட்டாட்சி மாநிலங்களான Micronesia, ஒப்பந்த விவகாரத்தில் சாலமன் தீவு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. பசுபிக் பிராந்தியத்தில் இருந்து எழுந்திருக்கும் முதல் எதிர்ப்புக் குரலாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

பசுபிக் பிராந்தியம் தொடர்பான அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான சர்ச்சை இந்த ஒப்பந்தம் காரணமாக மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், அதன் காரணமாக பாதிக்கப்படுவது பசுபிக் பிராந்தியத்திலுள்ள தீவுகளாக தான் இருக்கும் என்றும் FSM தலைவர் David Panuelo கூறியுள்ளார்.

பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவும் சீனாவும் போட்டி போட்டுக் கொண்டு தங்களது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இது குறித்த விரிவான விளக்கம் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை சாலமன் தீவு பிரதமர் Manasseh Sogavare-க்கு எழுதியிருப்பதாக David Panuelo தெரிவித்துள்ளார்.

China's Solomon Islands Security Agreement. Micronesia Federal States call for reconsideration of agreement..Micronesia கூட்டாட்சி மாநிலங்கள் ஒருவகையில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் நல்லுறவை பேணி வருவதாகவும், அதே நேரத்தில் பசுபிக் பிராந்தியத்தில் அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், குறிப்பாக பாதுகாப்பு விவகாரங்களில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் David Panuelo கூறியுள்ளார். பசுபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இங்கு உள்ள மாநிலங்களில் ஒன்று கூடி முடிவெடுக்க வேண்டும் என்றும். அதற்கு பெரிய நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் உதவிகள் அவசியம் என்றும் கூறப்படுகிறது.

சாலமன் தீவு இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் காரணமாக தன்னுடைய துருப்புக்களை பசுபிக் பிராந்தியத்தில் சீனா நிலைநிறுத்துவதற்கு அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதன்காரணமாக சீனா தனது ஆதிக்கத்தை பசுபிக் பிராந்தியத்தில் நிலை நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பசுபிக் பிராந்தியத்தில் உட்பட்ட சில பகுதிகளில் சீனா தொடர்ந்து தனது முதலீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் உதவியுடன் ஆதாரமான பல்வேறு நடவடிக்கைகளை அந்த பகுதியில் மேற்கொள்வதற்கான திட்டங்களை சீனா வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது அதன் ஒரு பகுதியாகவே தற்போது சாலமன் தீவு உடனான ஒப்பந்தத்தை சீனா மேற்கொண்டு இருப்பதாகவும் சர்வதேச பாதுகாப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

Link Source: https://ab.co/3Lwl7oJ