Breaking News

சீனாவில் அதி வேகமாக பரவும் டெல்டா வகை வைரஸ் : கொரொனா வைரஸ் தொடங்கிய ஊஹானில் ஒரு வாரத்தில் மட்டும் 12 மில்லியன் பரிசோதனைகள்

2019ம் ஆண்டு கொரோனா வைரஸ் முதன்முதலில் பரவிய ஊஹான் மாகாணத்தில் தற்போது மீண்டும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இப்புதிய தொற்று பரவல் மையங்கள் மூலமாக வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முகாமில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 12 மில்லியன் பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

China's fastest-spreading delta virus. 12 million tests a week on speculation of corona virus launch.டெல்டா வகை வைரஸின் பரவும் வேகத்தை குறைத்து மதிப்பிட்டு விட்டதாக சீன அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். ஓமானில் உள்ள தொழில் வர்த்தக வளர்ச்சி அமைப்பில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் சிலருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து அவர்களோடு தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து புதிய தொற்றுப் பரவல் மையமாக மாறியுள்ள அந்த இடம் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

கோடை விடுமுறைக்காக பல்வேறு ஊர்களுக்கு சென்று திரும்பியவர்கள், கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து நெருங்கிய தொடர்பில் இருந்த ஒன்பது பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் புதிய வகை வைரஸ் தீவிர தன்மைக்கு ஈடுகொடுக்கும் வகையில் இருக்கிறதா என்பது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. சில தடுப்பூசிகள் அது போன்ற நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக கொண்டிருப்பதாக அரசின் அதிகாரப்பூர்வ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

China's fastest-spreading delta virus. 12 million tests a week on speculation of corona virus launch,.தொற்றுப் இரவில் கண்டறியப்படும் இடங்களில் உடனடியாக ஊரடங்கு நிலை அமல்படுத்தப்படுகிறது மேலும் அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதோடு தொடர்புச் சங்கிலியில் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளும் திட்டத்தை சீன அரசு தீவிரப்படுத்தியுள்ளது. முதல் அலையில் பாதிப்பை விட இரண்டாவது அலையில் டெல்டா வகை வைரஸ் பாதிப்பு சீனாவில் மிக அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இந் நிலையில் தொற்றுப் பரவலை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முழு வேகத்தில் தொடங்கியுள்ள சீன அரசு, ஒரே வாரத்தில் 12 மில்லியன் பரிசோதனைகள் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Link Source: https://ab.co/2U60sTz