Breaking News

சீனாவில் கொரோனா வைரசால் மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் : சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை நீக்கினால் நாளொன்றுக்கு 6 லட்சத்து 30 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை

சீனாவில் தற்போது நடைமுறையிலுள்ள பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை மற்றும் சர்வதேச பயண கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் மிகப்பெரிய அளவில் நாளொன்றுக்கு 6 லட்சத்து 30 ஆயிரம் பேர் வரை வைரஸ் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் என்று Peking பல்கலைக்கழக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனாவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.

தற்போதுள்ள சூழலில் சிகிச்சைமுறைகள், தடுப்பூசி நடவடிக்கைகள் உள்ளிட்ட காரணங்களோடு எல்லை கட்டுப்பாட்டை தளர்த்தும் பட்சத்தில் ஏற்படும் விளைவுகளை சீனா சந்திப்பது கடும் சவால் ஆனது என்றும் Peking பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

China vulnerable to coronavirus outbreak. 6 lakh 30,000 people a day warned of international travel restrictions are lifted.அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளிலிருந்து கடந்த 6 மாதங்களில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தற்போது புள்ளிவிவரங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனடிப்படையில், பெருந்தொற்று கட்டுப்பாடுகளின் அடிப்படையில் சில நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா பின்பற்றும் பெருந்தொற்று நடைமுறைகளை மேற்கொள்ள ஆனால் அதன் மூலம் சீனாவில் 6 லட்சத்து 37 ஆயிரத்து 155 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக புள்ளியியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். இதேபோன்று ஸ்பெயின் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் அணுகுமுறை அடிப்படையிலும் தொற்று பாதிப்பு விவரங்களை அறிக்கையில் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரித்து வரும் நிலையில் சீனா சர்வ தேச எல்லைகளை திறக்கும் நடவடிக்கைகளை தற்போது மேற்கொள்வது மிகவும் அபாயகரமானது என்று கூறப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவில் இருந்து பறவை தொடங்கியுள்ள ஒமைக்ரான் புதிய வகை வைரஸ் காரணமாக ஏராளமான நாடுகள் எல்லை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதித்துள்ளது.

Link Source: https://ab.co/3o42gbM