உலகியிலேயே மிக உயரமான மலைச்சிகரமான எவெரெஸ்ட் சிகரம் நேபாள நாட்டில் அமைந்துள்ளது. இந்த மலைச்சிகரத்தில் உச்சியை எட்டியை சாதனை படைக்க பல்வேறு நாடுகளில் இருந்தும் மலைஏற்ற வீரர்கள் நேபாள நாட்டிற்கு வருகை தருவார்கள். இந்நிலையில் சீனாவில் தொடங்கிய கோவிட் 19 – கொரோனா நோய்த்தொற்று அந்நாட்டைத் தவிர மற்ற நாடுகளில் அதி தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது நேபாள நாட்டில் மலையேற்றத்துக்கு வரும் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு இருந்தால் அது சீன நாட்டின் மலையேற்ற வீரர்களுக்கும் பரவும் என்பதால் சீனா எவரெஸ்ட் சிகரத்தில் எல்லைக்கோடு அமைக்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
வழக்கமாக பருவமழைக்கு முன்னதாக ஏப்ரல் முதல் ஜீன் முதல் வாரம் வரை மலையேற்றத்துக்கு நேபாள அரசு அனுமதி அளிக்கும். ஆனால், தற்போது மலையேற்றத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா தொழிலை சார்ந்திருப்போரின் வருவாய் பாதிக்கப்பட்டதோடு பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். நேபாளத்தில் இருந்து மலையேற்றத்தில் ஈடுபட்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்நாட்டு அரசு இம்முடிவை எடுத்தது.
அதே நேரத்தில் திபெத்தியர்கள் உருவாக்கியுள்ள மலையேற்ற நெறிமுறைகளை பின்பற்றினால் இது போன்ற எல்லைக்கோடு அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், திபெத் வழியாக வருவோருக்கு அதிக அளவில் தொற்று பாதிப்பு ஏற்படுவதாக கூறி அரசு மலையேற்றத்துக்கு தடை விதித்தது என்றும் திபெத்திய மலையேற்ற பயிற்சியாளர்கள் கூறியுள்ளனர்.
நேபாளில் ஒரு நாள் தொற்று எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்து பதிவாகி உள்ள நிலையில், வெளிநாட்டினர் வருகைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எவரெஸ்ட் சிகரத்தில் சீனா எல்லைக்கோடு அமைக்கும்பட்சத்தில் அதை அமல்படுத்தும் விவகாரத்தில் திபெத் மலையேற்ற வழிகாட்டிகள் எவ்வாறு செயல்படுவார்கள் என்ற கேள்வியும், மலையேற்ற வீரர்களுக்கான தொடர்பை துண்டிக்க எந்தெந்த பகுதிகளை ஒட்டி எல்லைக்கோடு அமைக்கப்படும் என்ற விவரமும் இதுவரை வெளியாகவில்லை. 8 ஆயிரத்து 848 மீட்டர் உயர சிகரத்தின் உச்சியில் சிறிய பனி மேட்டில் 6 வீரர்கள் தங்கி ஓய்வெடுக்கும் அளவுக்கு இடம் உள்ளதாகவும் எனவே எல்லைக்கோட்டின் அவசியத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
2019ம் ஆண்டு உலகின் முதல் கொரொனா வைரஸ் தொற்று பரவலுக்கு காரணமாக இருந்த சீன நாட்டில் தற்போது அதன் தாக்கம் எதுவும் இல்லாத நிலையில், தற்போது மற்ற நாட்டினரிடையே தொடர்பை துண்டிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை அந்நாடு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Link Source: https://cutt.ly/vbDX4nx