Breaking News

உலக வர்த்தக ஒப்பந்த விதிகளுக்கு எதிராக செயல்படுவதாக ஆஸ்திரேலியா மீது சீனா புகார் தெரிவித்துள்ளது.

சீனாவின் வூஹான் மாகணத்தில் இருந்து கொரோணா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தோற்றம் குறித்து பல்வேறு சந்தேகங்களை ஆஸ்திரேலியா முன்வைத்து வருக்கிறது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு சீனாவுக்கும் இடையே இருந்த உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஆஸ்திரேலிய  பொருட்களை இறக்குமதி செய்யக்கூடாது என்று மறைமுகமாக  தன்னுடைய வியாபாரிகளுக்கு சீனா உத்தரவிட்டதாக ஆஸ்திரேலியா குற்றம் சாட்டியிருந்தது.

இந்நிலையில் சீனாவின், காற்றாலை உற்பத்தி உபகரணங்கள், ஸ்டீல் பொருட்கள் , ரயில் சக்கரங்கள் போன்றவற்றுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுவதாக சீனா, ஆஸ்திரேலியா மீது உலக வர்த்தக நிறுவனத்திடம் புகார்  தெரிவித்துள்ளது.

China has complained to Australia that it is acting against the terms of the World Trade Agreement,அந்த புகாரில் , சீனாவின் பொருட்களுக்கு வெளிநாட்டு பொருள் குவிப்பு சட்டத்தின்   கீழ் ஆஸ்திரேலியாவில் கூடுதல் வரி விதிக்கப்பட்டுடவதாகவும் இது சர்வதேச வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளது. இதற்கு பதிலளித்த ஆஸ்திரேலிய வர்த்தக துறை அமைச்சர்  Dan Tehan, சீனா குற்றம்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த பொருள் குவிப்புக்கு எதிரான நடவடிக்கை கடந்த 204,2015 மற்றும் 2019  ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்டது என்றும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

அண்மையில் ஆஸ்திரேலியாவின் மது சார்ந்த  பொருட்களை இறக்குமதி செய்வதற்கு சீனா இதே போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக சீனா மீது ஆஸ்திரேலியா உலக வார்த்த நிறுவனத்தில் புகார் தெரிவித்திருந்தது.

அந்த புகாருக்கு பதிலடியாக இதே போன்ற புகாரை ஆஸ்திரேலியா மீது சீனா புகார் தெரிவித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் சீனாவின் வரத்தக உரிமையை காப்பாற்ற அவர்களுக்கு உரிமை இருக்கும் அதே நேரத்தில், ஆஸ்திரேலியாவின் நலன் சார்ந்த நடவடிக்கை எடுக்க தங்களுக்கு உரிமை உள்ளதாக வர்த்தக துறை அமைச்சர் Dan தெரிவித்துள்ளார்.

மேலும் ஆஸ்திரேலியாவுக்கு சீனாவுடனான வர்த்தக உறவில் சுமூக நிலை  நீடிக்கவே விரும்புவதாகவும்,  இரு நாட்டு அமைச்சர்களும் இது குறித்து கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் ஆஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.

ஆனால் பேச்சுவார்த்தைக்கு ஆஸ்திரேலியா முயற்சித்தாலும், சீனாவிடம் இருந்த எந்த பதிலும் இல்லை என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Link Source: https://ab.co/2SrtEn3