Breaking News

நார்தன் டெரிட்டரியில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளதை அடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவை எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான உருவாகியுள்ளது என்று முதலமைச்சர் மைக்கேல் கன்னர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் நார்தன் டெரிட்டரியில் 1,306 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 148 பேருக்கு உடனடி மருத்துவ சிகிச்சை வழங்கவேண்டும் என்கிற தேவை உருவாகியுள்ளது. அதிலும் 16 பேருக்கு ஆக்சிஜன் தரப்படவேண்டும் என்றும் 6 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் சராசரியாக இருக்கும் எண்ணிக்கைகளை விட மாநிலத்தில் தீவிர சிகிச்சை பிரிவின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என முதல்வர் மைக்கேல் கன்னர் தெரிவித்துள்ளார். இதேநிலை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில், அதற்கு இப்போதே தயாராகி விடுவது ஏற்புடையதாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களே அதிகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் நார்தன் டெரிட்டரியில் மீண்டும் பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.

Link Source: https://ab.co/3J5dMeI