Breaking News

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் Inner West கவுன்சில் மேயர் மாற்றம் : டிசம்பரில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதிய மேயர் நியமனம்

Change of Inner West Council mayor in Sydney, Australia. New mayor appointed ahead of December election

சிட்னி Inner West கவுன்சில் மேயராக இருந்த Darcy Byrne தான் நீக்கப்பட்ட நடவடிக்கை ஒரு ‘Backroom Deal’ என்று விமர்சனம் செய்துள்ளார். கொரோனா முடக்க நிலை காலகட்டத்தில் தற்காலிக மேயராக இருந்தவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்ததாகவும் அதற்கு தான் பொறுப்பேற்க இயலாது என்றும் Darcy Byrne தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Change of Inner West Council mayor in Sydney, Australia. New mayor appointed ahead of December election.உள்ளூர் மக்களுக்கு முடக்க நிலை காலகட்டத்தில் பல்வேறு சேவைகள் மற்றும் தேவைகள் இருந்த நிலையில் அதனை கருத்தில் கொள்ளாமல் அரசியல் ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டதாகவும் அதன் விளைவாகவே தன்னுடைய பதவி பறிக்கப்பட்டிருப்பதாகவும் Darcy Byrne குற்றம்சாட்டியுள்ளார். இன்னிலையில் காணொளி வாயிலாக நடைபெற்ற கட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்களித்து புதிய மேயரைத் தேர்வு செய்தனர். அதன் அடிப்படையில் மொத்தமுள்ள 15 கவுன்சிலர் வாக்குகளில் 7 வாக்குகள் பெற்று புதிய பெண் மேயராக Rachelle Porteous தேர்வு செய்யப்பட்டார்.

Greens கவுன்சிலராக இருந்த Rachelle Porteous Inner West-ன் புதிய மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளதன் மூலம் அதிக பெண் மேயர்கள் நியமிக்கப்பட்ட பகுதியாக நியூ சவுத் வேல்ஸ் மாறியுள்ளது.மேலும் Inner West-ன் முதல் பெண் மேயர் என்ற பெருமையையும் Rachelle Porteous பெற்றுள்ளார்.

அடுத்த மூன்று மாதங்களுக்கு மேயராக இவர் நீடிப்பார் என்றும், டிசம்பர் மாதம் 4ம் தேதி நடைபெறும் நியூ சவுத் வேல்ஸ் மாகாண தேர்தலில் உரிய முறையில் மேயர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Change of Inner West Council mayor in Sydney, Australia. New mayor appointed ahead of December election,.மேயர் தேர்வு மற்றும் இந்த பிரச்சனைகளுக்கு காரணமாக குற்றம் சாட்டப்படும் Backroom Deal விவகாரத்தில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் Civil and Administrative Tribunal – NCTA அதிக அளவில் தன்னுடைய தலையீடுகளை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சமூக வலைதளங்களில் எழுந்த பல்வேறு புகார்களை இந்த அமைப்பு சட்ட விரோதமாக நீக்கிய தாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் கவுன்சிலர்கள் என்ன காரணத்திற்காக முந்தைய மேயர் Darcy Byrne-ஐ தேர்வு செய்யவில்லை என்றும், புதிய மேயராக தன்னை தேர்வு செய்வதற்கான தேவை எங்கிருந்து எழுந்தது என்பது குறித்தும் மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்று புதிய மேயர் Rachelle Porteous தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3E5pAvR