Breaking News

Bluff Knoll மலைக்குன்றுகளில் உள்ள பனி மழையாக பொழிய வாய்ப்பு : மேற்கு ஆஸ்திரேலியாவில் குளிர்ச்சியான சூழல் நிலவும் எனவும் அறிவிப்பு

Chance of snowfall in the Bluff Knoll Hills.

மேற்கு ஆஸ்திரேலியாவின் தென் மேற்கு பகுதிகளில் அடுத்த ஒரு வாரத்திற்கு கடுமையான குளிர் சூழல் நிலவும் என்றும், இந்த ஆண்டிற்கான சீசனாக பனி மழை பொழியும் என்று எதிர்பார்ப்பதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Chance of snowfall in the Bluff Knoll Hillsஇந்த வாரம் சனிக்கிழமை முதல் தென் மேற்கு பிராந்தியங்களில் பரவலாக மழைப் பொழிவு இருக்கும் என்றும், ஞாயிறு முதல் இந்த ஆண்டின் அதிகபட்ச குளிர் சூழல் மேற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Bluff Knoll -ல் தொடங்கும் பனிப்பொழிவு அல்பேனியின் வடக்கு பகுதி வரை சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் என்று வானியல் ஆய்வாளர் Austen Watkins கூறியுள்ளார். திங்களன்று காலை முதல் கடுமையான மழைப் பொழிவு என்று கூறியுள்ள அவர், இது எப்படியான தன்மையை கொண்டிருக்கும் என்பதை இதுவரை கணிக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Chance of snowfall in the Bluff Knoll Hills,2020ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் Bluff Knoll -ல் பனிப்பொழிவு இருந்ததாகவும், அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளை ஒப்பிடும் போது 2020ம் ஆண்டில் குறைவான அளவே இருந்ததாகவும் ஆய்வாளர் கூறியுள்ளார். எனவே இந்த ஆண்டு வெப்பநிலை 9 டிகிரி செல்சியஸ்-ல் இருந்து 6 டிகிரியாக குறைய வாய்ப்புள்ளதாகவும், பெர்த் பகுதியில் 17 டிகிரி முதல் 19 டிகிரி வெப்பநிலை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Link Source: https://ab.co/2RBFmLl