Breaking News

தெற்கு ஆஸ்திரேலியாவில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சந்திக்கும் சவால்கள் : 800 ஆசிரியர்கள் வரை பணியில் இருந்து சென்ற விட்டதால் மற்ற ஆசிரியர்கள் மீதான அழுத்தம் அதிகரிப்பு

Challenges Facing Teachers in Schools Due to Teacher Shortages in South Australia. Increased Pressure on Other Teachers as Up to 800 Teachers Have Dismissed

கொரோனா கால கட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது படிப்படியாக பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் அந்த நேர நெருக்கடி நிலை தற்போது வரை இயல்பு நிலைக்கு திரும்பாமல் இருப்பதாகவும் குறிப்பாக பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் கோவிட் நெருக்கடி காரணமாக தங்கள் பணிகளை இழந்துவிட்ட நிலையில் ஆசிரியர் நெருக்கடி தற்போது பலமடங்கு அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.

Challenges Facing Teachers in Schools Due to Teacher Shortages in South Australia. Increased Pressure on Other Teachers as Up to 800 Teachers Have Dismissed...தெற்கு ஆஸ்திரேலியா வில் 800 ஆசிரியர்கள் வரை பணியிலிருந்து சென்று விட்ட காரணத்தால் தற்போது பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மிகவும் களைப்படைந்து விடுவதாகவும், இதன் காரணமாக பல்வேறு கல்வி அல்லாத மாணவர்களுக்கான சில நிகழ்வுகளை பள்ளிகளில் ரத்து செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய பள்ளிக்கல்வி யூனியனின் தெற்கு ஆஸ்திரேலியா கிளை மகாணம் முழுவதுமாக ஒரு கணக்கெடுப்பை நடத்தி இருப்பதாகவும், அதன் அடிப்படையில் ஆசிரியர் பற்றாக்குறை என்பது கடுமையாக நிலவுவதாகவும் கூறியுள்ளது.

தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விடுபட்ட பாடங்களை நடத்தி வருவதாகவும், அதே நேரத்தில் நீண்ட விடுமுறைக்குப் பின்னர் வரும் மாணவர்களுக்கும் அதற்கான கால அட்டவணையை அவர்கள் பூர்த்தி செய்வதாகவும் பணியில் இருந்து சென்று ஆசிரியர்களின் கூடுதல் பணியையும் தற்போது அவர்கள் ஏற்க வேண்டிய சவால் இருப்பதாகவும் பள்ளிக்கல்வி யூனியனின் தெற்கு ஆஸ்திரேலிய கிளை தலைவர் Andrew Gohl தெரிவித்துள்ளார்.

Challenges Facing Teachers in Schools Due to Teacher Shortages in South Australia. Increased Pressure on Other Teachers as Up to 800 Teachers Have Dismissed.மாணவர்களின் படைப்புகளை காட்சிப்படுத்துதல், முகாம்கள், கார்னிவல், பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு, நேர்காணல்கள் உள்ளிட்ட பெரும்பாலான நிகழ்வுகள் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் மீண்டும் இயல்பு நிலை திரும்பும் பட்சத்தில் மேற்கண்ட நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் Andrew Gohl தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நிலைமையை சமாளிக்கும் வகையில் தற்போது தற்காலிக ஆசிரியர்களை பணியில் அமர்த்தும் அதற்கான திட்டங்கள் இருப்பதாகவும், மாகாணத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பற்றாக்குறைக்கு ஏற்ப 4 ஆயிரம் பகுதி நேர மற்றும் தற்காலிக ஆசிரியர்களை பணியமர்த்தும் நடவடிக்கைகளில் பள்ளிக்கல்வி யூனியன் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கோவில் நெருக்கடிக்கு பின்னர் பள்ளிக்கு வந்து இருக்கும் மாணவர்களை நெருக்கடிக்கு ஆளாகாத வண்ணம் அதற்கான உரிய பயிற்று முறை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆசிரியர்களின் பங்கு முக்கியம் என்பதால் அதில் கூடுதல் கவனம் செலுத்துவோம் என்றும் தெற்கு ஆஸ்திரேலிய கிளை தலைவர் Andrew Gohl கூறியுள்ளார்.

Link Source: https://ab.co/3NOXGJs