Breaking News

மெல்போர்னில் நடைபெற்ற CFMEU தொழிலாளர்கள் ஆர்பாட்டம் மூலம் தொற்றுப் பரவல் : பச்சிளங் குழந்தை உட்பட குடும்பத்தினருக்கு தொற்றுப் பரவியதால் கட்டுபாடுகள் அதிகரிப்பு

CFMEU workers protest in Melbourne.

மெல்போர்னில் கட்டுமான தொழிலுக்கு தடை விதிக்கப்பட்டது மற்றும் கட்டாய தடுப்பூசி நடவடிக்கை உள்ளிட்டவற்றை கண்டித்து கடந்த மாதம் கட்டுமானம், துறைமுகம், வனம், சுரங்கம் உள்ளிட்ட தொழிலாளர்களின் கூட்டமைப்பினர் அந்த அலுவலகத்தின் முன்பு ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 7 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆர்பாட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்களின் குடும்பத்தில் நான்கு மாத பச்சிளம் குழந்தை வயதானவர்கள் உட்பட 4 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

CFMEU workers protest in Melbourneஇதுவரை 37 பேர் அறிகுறிகளோடு கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 7 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் பலருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. முடக்க நிலை கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டது மற்றும் கட்டாய தடுப்பூசி நடவடிக்கையை உள்ளிட்டவற்றுக்கு எதிராக தொழிலாளர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் தற்போது தோற்றுப் பரவல் மையமாக உருவெடுத்திருப்பது மிகவும் கவலைக்குரியது என CFMEU அமைப்பின் விக்டோரியா செயலாளர் John Setka கூறியுள்ளார்.

போராட்டம் காரணமாக அவர்களின் குடும்பத்தினர் உட்பட மேலும் பலருக்கு டெல்டா வகை வைரஸ் பாதிக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும், பச்சிளம் குழந்தைகள், வயதானவர்கள் என பலருக்கு தொற்று பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டு வாரம் முடக்க நிலைக்கு பின்னதாக செவ்வாய்க்கிழமையன்று கட்டுமான தொழிலாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக வெளியான அறிவிப்பின் படி 25 சதவீத கட்டுமான பணிகள் தொடங்கியுள்ள நிலையில், பணிக்கு வந்த தொழிலாளர்கள் மீண்டும் வீடு திரும்புவதற்கு அனுமதி இல்லை என்றும் அவர்கள் இரண்டு வாரம் தனிமைப்படுத்தல் இருக்க வைக்கப்படுவார்கள் என்றும் CFMEU அமைப்பின் செயலாளர்
John Setka தெரிவித்துள்ளார்.

விக்டோரியாவில் தற்போது நாள் ஒன்றுக்கு 1763 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் வைரஸ் பாதிப்பு தொடங்கப்பட்டதிலிருந்து மாகாணங்களில் பதிவாகும் அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

Link Source: https://bit.ly/2YxptsP