இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 314835 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.டெல்லியில் மட்டும் 26 ஆயிரத்துக்கும் அதிகமானவர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 306 பேர் டெல்லியில் உயிரிழந்துள்ளனர். இதனால் சுடுகாடுகளுக்கு கொண்டுவரப்படும் உடல்களை எரியூட்ட முடியாமல் ஊழியர்கள் திண்டாடி வருகின்றனர். டெல்லியில் இருக்கும் நிலையை புகைப்படம் எடுத்துள்ள ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் , நிலைமையின் தீவிரத்தன்மையை உணர்த்துகிறது.
எரியூட்ட இடம் கிடைக்காமல் உயிரிழந்த தன் தாயாரின் உடலை இரண்டு நாட்களுக்கு வீட்டில் வைத்திருந்ததாக கூறுகிறார் நித்தீஷ் குமார்.
விளையாட்டு திடல்கள் தற்காலிகமாக உடல்களை எரியூட்டும் இடமாக மாற்றப்பட்டுள்ளன.
தன் தாயாரின் உடலை எரிக்க விறகு இல்லாமல் திண்டாடியதாக குமார் கண்ணீர் மல்க தெரிவிக்கிறார்.
தனியார் தொண்டு நிறுவனம் நடத்திவரும் ஜித்தேந்தர் சிங் ஒரே நேரத்தில் 60 உடல்கள் எரியூட்டப்பட்டதாக தெரிவிக்கிறார்.
டெல்லியில் தன் வாழ்நாளில் இது போன்ற மோசமான ,துயரமான தருணத்தை தான் சந்தித்ததில்லை என்று கூறுகிறார்.5 வயது முதல்25 வயது இளைஞர்களின் உடல்களை எரியூட்டுவதாகவும்,திருமணமான இளம் தம்பதியினரின் உடல்களை எரியூட்டுவதாகவும் தன் வேதனையை விளக்குகிறார். அரசு சுகாதாரத்துறை பணியாளராக பணியாற்றி தொற்று பாதித்த தன் தாயாருக்கு பத்து நாட்களாக சிகிச்சையளிக்க மருத்துவமனையில் ஒரு படுக்கை கூட வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அரசு தங்களை கைவிட்டுவிட்டதாகவும், தாங்கள் நிற்கதியாக நிற்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.