உக்ரைன் மீதான போரை 14வது நாளாக தொடர்ந்து நடத்தி வரும் ரஷ்யா தங்களது இலக்கை அடையும் போர் நிறுத்தம் இல்லை என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் பல்வேறு நகரங்களில் இருந்து மக்கள் வெளியேறும் வகையில் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என்று உக்ரைன் கோரிக்கை விடுத்த நிலையில் அதனை ரஷ்யா ஏற்க மறுத்துவிட்டது.
இதனை அடுத்து பிரான்ஸ் அதிபர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட பலர் விடுத்த கோரிக்கையை ஏற்று ரஷ்ய ராணுவம் கிவிவ், கார்கிவ், Sumy, Mariupol உள்ளிட்ட 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், குறிப்பிட்ட நகரங்களில் இருந்து மக்கள் வெளியேறுவதற்கான போக்குவரத்து வழித்தட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், Mariupol வில் இருந்து Zaporizhzhia நகருக்கு செல்வதற்கான 8 டிரக்குகள் மற்றும் 30 பேருந்துகள் தயார் நிலையில் உள்ளதாகவும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் Oleg Nikolenko கூறியுள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் இந்த நடவடிக்கைக்கு ரஷ்யா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், முன்னதாக கோரிக்கை விடுத்தும் தற்காலிக போர் நிறுத்த நடவடிக்கையை மீறியதை போல இருக்கக் கூடாது என்றும் Oleg Nikolenko கேட்டுக் கொண்டுள்ளார்.
Mariupol நகரில் குழந்தை ஒன்று நீர்ச்சத்து இழந்து உயிரிழந்த சம்பவத்தை குறிப்பிட்டுப் பேசிய உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, பல்வேறு நகரங்களில் தொடர்ந்து மக்கள் தனித்து விடப்படும் நிலையை தவிர்க்கும் வகையில் மனிதாபிமான வழித்தடத்தை ரவகையில் மனிதாபிமான வழித்தடத்தை ரஷ்யா ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் வீடியோ வெளியிட்டுள்ள அதிபர் செலன்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து பல்வேறு நாடுகளுக்க அகதிகளாக வெளியேறிய மக்களின் எண்ணிக்கை 20 லட்சமாக அதிகரித்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. அதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உக்ரைனிய குடிமக்கள் அல்லாதவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sumy, Mariupol நகரில் இருந்து செஞ்சிலுவைச் சங்கம் ஏற்பாடு செய்த பேருந்துகளில் ஏராளமான மக்கள் தங்கள் குறைந்தபட்ச உடைமைகளுடன் வெளியேறும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இதற்கு முன் இல்லாத அளவுக்கு மிகவும் தங்களது பலத்தை நிருபிக்கும் வகையில் ரஷ்யா கடுமையாக நடந்து கொள்வதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
Link Source: https://ab.co/3IYms75