Breaking News

“Cash for visas” திட்டத்திற்கும் Daryl Maguire-க்கும் தொடர்பு- உள்துறை அமைச்சகம் விசாரணை !

முன்னாள் NSW மாநில MP Daryl Maguire உடன் இணைக்கப்பட்ட cash for visas திட்டம் குறித்து Home Affairs விசாரித்து வருகிறது.
கடந்த வாரம் முன்னாள் Wagga Wagga MP, NSW ஊழல் தடுப்பு ஆணையத்திடம், தனக்கு கொடுக்கப்பட்ட பொது அலுவலகத்தை தனிப்பட்ட லாபத்திற்காக பயன்படுத்தியதாகவும், விசா திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான டால்ர்களை பெற்றதாகவும் தெரிவித்தார்.

Senate Estimates Committee முன் ஆஜரான உள்துறை செயலாளர் Mike Pezzullo, விசா தொடர்பான தனது துறைக்கு திரு Maguire அளித்த ஆணையங்களை தனது துறை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.

சீன நாட்டினருக்கு விசாக்களை ஏற்பாடு செய்யும் நோக்கத்திற்காக Mr Maguire பல Riverina நிறுவனங்களை migration agent-ற்கு அறிமுகப்படுத்தியதாக கடந்த வாரம் NSW corruption watchdog கேள்விப்பட்டது.

இந்த திட்டத்துடன் எத்தனை விசாக்கள் தொடர்புடையவை என்பதும் மற்றும் அதில் தொடர்புடையவர்களுக்கான அபராதம் பற்றியும் தனது துறை ஆய்வு செய்வதாக MR Pezzulla தெரிவித்தார்.

எந்த நேரத்தில் எந்த நபருக்கு எத்தனை விசாக்கள் வழங்கப்பட்டன என்பதை நாங்கள் கண்டிப்பாக கண்டறிவோம் என அவர் கூறினார்.
எந்த சூழ்நிலையில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.இம்மாதிரி திட்டங்களால் migration system மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை குறைகிறது என்றும் அவர் தனது கருத்தை முன்வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ், விசா விண்ணப்பதாரர்கள் தங்கள் ஊதியம் மற்றும் கமிஷன்களில் முதல் மூன்று மாதங்களில் 20,000 டாலர்கள் வரை செலுத்தியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.வணிகங்கள் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் பின்னர் ஊதியத்தை திரும்பத்தரும் என திரு Maguire தெரிவித்தார்.

இந்த திட்டத்துடன் இணைக்கப்பட்ட தனது நாடாளுமன்ற அலுவலகத்திற்கு ஆயிரக்கணக்கான டாலர்களை வழங்குவதை ஏற்றுக்கொண்டார் திரு Maguire.இந்த திட்டம் முறையானது அல்ல என்று 2013 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தாம் சந்தேகப்பட்டதாக commissioner Ruth McCollஇடம் திரு Maguire தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.