ஆஸ்திரேலியாவின் கார்ப்பரேட் வழக்குகளில் இதுவரை இல்லாத அளவுக்கு குறிப்பிடத்தக்க வகையில் 50 மில்லியன் டாலர் அபராதம் விதித்து மெல்போர்ன் மத்திய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நுகர்வோர் கண்காணிப்பு அமைப்பு மற்றும் டெல்ஸ்ட்ராவின் அனைத்து ஆதாரங்களையும் பெற்று அதனை தீர விசாரித்து ஒருவார காலத்திற்கு பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் மிகுந்த கோபத்திற்கு ஆளாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
108 உள்நாட்டு வாடிக்கையாளர்களின் மாதிரிகளைப் பெற்று நீதிமன்றம் விசாரணை நடத்திய நிலையில், டெல்ஸ்ட்ரா வாடிக்கையாளர்களை தேவையற்ற திட்டங்களை தேர்ந்தெடுக்க வைத்து கூடுதல் பணம் செலுத்த நிர்ப்பந்தித்த தாக கூறப்படுகிறது. இந்த 108 பெயரின் வழக்குகளில் ஒன்றுதான் நீதிமன்றத்திற்கு வந்து இந்த உத்தரவு பிறப்பிக்க காரணமான ப்ரூமியை சேர்ந்த Caitlyn Roe வழக்கு. டெல்கோ நிறுவனத்தில் நிதி அதிகாரிகளிடம் தொடர்ந்து விசாரணையை நடத்த இந்த வழக்கு ஒரு தொடக்கமாக மாறி உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இது போன்ற நிலை இருப்பதாகவும் டெல்ஸ்ட்ராவின் FIVE STAR கடைகளின் மூலம் தவறாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் Caitlyn Roe ப்ரூமியில் உள்ள டெல்கோ கடை ஒன்றில் தனது ப்ரீ பெய்ட் போன் ப்ளானை வாங்கி உள்ளார். ஒரு மாதத்திற்கு உள்ளாகவே பில் தொகை 2 ஆயிரத்து 200 டாலர் வந்துள்ளது. இது தொடர்பாக நிதி அதிகாரி உடன் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் டெல்கோ அந்த விவகாரத்தில் சமரசம் அடையாத நிலையில் Caitlyn தோல்வி அடைந்தார்.
பில் தொகை வசூலிப்பவர்களின் தொடர் நெருக்கடிகளுக்கு பின்னர் இந்த விவகாரத்தில் முடிவு எட்ட நுகர்வோர் நிதி ஆலோசகரை அணுகினார். பல்வேறு அரசு நிறுவனங்களில் 13 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய Trudi Ridge, தற்போது நுகர்வோர்களுக்கு நிதி ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். குறிப்பிட்ட டெலிகொம் நிறுவனமான டெல்கோ, இதுபோன்ற அதிக தொகையுடன் வாடிக்கையாளர்களிடம் பில் வசூலிப்பது அவர்களின் உணவு எரிபொருள் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார். 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் டாலர் வரை பில் தொகையை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது டெல்கோ நிறுவனம். அதிகபட்சமாக 19 ஆயிரம் தொகைக்கு டெல்கோ பில் வழங்கி உள்ளது. வசாதாரண மக்கள் இது போன்ற நிதி நெருக்கடியில் சிக்கி செல்போன்களை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
கேமராவில் செயல்பட்டுவரும் ஆஸ்திரேலியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் தொடர்ந்து இதுபோன்ற விவகாரங்களில் ஆய்வு நடத்தி குறிப்பிட்ட நிறுவனங்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது அந்த வகையில் தற்போது நீதிமன்றம் பிறப்புத் இருக்கக்கூடிய அபராத தொகையை டெல்ஸ்ட்ரா தொலைத்தொடர்பு நிறுவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. மேலும் இந்த தொலை தொடர்பு பயன்படுத்தும் ஊரகப் பகுதிகளிலும் இதே போன்ற கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று தொடர்ந்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிறுவனத்தின் நெட்வொர்க்கை பயன்படுத்தும் மேலும் பலரும் இதே போன்ற புகார்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Link Source: https://ab.co/3ePCFPq