Breaking News

ஆஸ்திரேலியாவில் அபாய அளவை கடந்துவிட்ட கரியமில வாயு வெளியேற்றம்..!!

வாகனங்களுக்கான எரிபொருள் திறன் விதிகளை வகுப்பதன் மூலம், பல பில்லியன் கணக்கான டாலர்களை சேமிக்க முடியும் என்று பொது கொள்கை சிந்தனை குழு தெரிவித்துள்ளது.

Carbon dioxide emissions in Australia have exceeded the dangerous level

ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில், புதிய வாகனங்களுக்கான வலுவான தரநிலைகள் மாசு உமிழ்வை கட்டுப்படுத்தும் எனவும், இதனால் எரிபொருள் செலவீனங்கள் குறையும் என்று கூறியுள்ளது. இதுதொடர்பாக வாகன விற்பனையாளர்கள் கூறுகையில், மாசு உமிழ்வு தரநிலைகளை அடையக்கூடியதாக இருக்க வேண்டும், அதை வைத்து வாகனத்துறையை புறக்கணிக்கக்கூடாது என்றனர்.

Carbon dioxide emissions in Australia have exceeded the dangerous level,கடந்த 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், ஆஸ்திரேலியாவில் சராசரியாக இயங்கும் ஒரு வாகனத்தில் இருந்து ஒவ்வொரு கி.மீ-க்கும் 169.8 கிராம் கரியமில வாயு வெளியேறுவது தெரியவந்தது. அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை 129.9 கிராமாகவும், ஐரோப்பாவில் 120.4 கிராமாகவும், ஜப்பானில் 114.6 கிராமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. வாகனங்களுக்கான எரிபொருள் திறன் விதிகளை அரசு அறிமுகப்படுத்த 3 ஆஸ்திரேலியர்களில் ஒருவர் ஆதரவளித்துள்ளனர். ஐரோப்பாவில் நடைமுறையிலுள்ள மாசு உமிழ்வு விதிகள் ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.