Breaking News

ஓமைக்ரான் வகை கொரோனா குழந்தைகளை பாதிக்கக் கூடுமா? நிபுணர்கள் சொல்லும் கருத்து என்ன..?

Can Omicron Corona Affect Children What do the experts say.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் வயதானவர்களைக் காட்டிலும் சிறார்களுக்கு பாதிப்பு குறைவு தான் என்றும், 100 குழந்தைகளில் வெறும் 1.3 விழுக்காட்டினருக்கு மட்டுமே மருத்துவமனை கண்காணிப்பு தேவைப்படும் நிலையில், அதிகப்பட்சமாக அவர்கள் இரண்டு நாட்கள் வரை மட்டுமே சிகிச்சையில் இருக்க நேரிடுவதாக மூத்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

Can Omicron Corona Affect Children. What do the experts sayஆஸ்திரேலியாவில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் நாடு முழுவதும் பெற்றோர்கள் பலர் தங்களுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திட மையங்களில் குவிந்து வருகின்றனர். இதனால் ஓமைக்ரான் வகை கொரோன வைரஸ் பரவல் குழந்தைகள் மத்தியில் அதிகரிக்குமா என்கிற அச்சம் எழுந்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பெர்த் குழந்தைகள் மருத்துவமனையின் தொற்று நோய் துறை தலைவர் ஆஷா பவுன், 5 முதல் 11 வயது வரையிலுள்ள சிறார்களுக்கும் மர்றும் 12 முதல் 17 வயது வரையிலான சிறுவர், சிறுமியருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டால், அவர்கள் பெரியளவில் பாதிக்கப்படுவது கிடையாது. டெல்டா வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது கூட 50 முதல் 60 சதவீத குழந்தைகளுக்கு மட்டுமே மருத்துவக் கண்காணிப்பு தேவைப்பட்டது. எனினும் ஓமைக்ரான் வகை கொரோனா பாதிப்பில் அதனுடைய சங்கலியை நாம் உற்றுநோக்குவது கட்டாயம் என்று தெரிவித்துள்ளார்.

Can Omicron Corona Affect Children What do the experts sayஅதேபோல மற்றொரு மருத்துவரான டான்சின் கூறும்போது, தேவையில்லாத மருத்துவக் காரணங்களுக்கு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தால், அந்த குடும்பத்தில் இருக்கும் குழந்தையையும் மருத்துவமனையில் அனுமதித்து விடுகின்றனர். வேறு சில உடல்நல பிரச்னைக்காக அனுமதிக்கப்படும் குழந்தைகளும் கொரோனா தொற்றுக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது என்று அவர் கூறினார்.

Link Source: https://ab.co/33sLYkU