Breaking News

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 2023 தேர்தலை கருத்தில் கொண்டு அமைச்சரவையில் மாற்றம் : பெண்களை அதிக அளவில் அமைச்சரவையில் இணைத்துள்ள ப்ரீமியர் Dominic Perrottet 

Cabinet reshuffle ahead of 2023 election in New South Wales. Premier Dominic Perrottet

2023ம் ஆண்டு நடைபெற உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாகாண தேர்தலை மனதில் கொண்டு அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் இருபத்தி ஆறு பேரில் புதிதாக 7 பெண்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். முன்னாள் ப்ரீமியர் Gladys Berjikilian அமைச்சரவையில் பணியாற்றிய ஒருவரும் தற்போது மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக அமைச்சரவை மாற்றம் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வந்த நியூ சவுத் வேல்ஸ் மாகாண ப்ரீமியர் Dominic Perrottet, தற்போது புதிதாக 9 அமைச்சர்களை அமைச்சரவையில் இடம் பெறச் செய்துள்ளார். இது 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாகாண தேர்தலை கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட அமைச்சரவை மாற்றம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Cabinet reshuffle ahead of 2023 election in New South Wales. Premier Dominic Perrottet.கோவிட் தொற்று இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில் ஒமைக்ரான்பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சுகாதார அமைச்சராக Brad Hazzard தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை போர்ட்போலியோ தற்போது துணை பிரீமியர் ஆன Paul Toole க்கு வழங்கப்பட்டுள்ளது. கல்வித் துறை அமைச்சராக இருந்த Sarah Mitchell அத் துறையிலேயே தொடர்ந்து நீடிப்பதற்கான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.

அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மூத்த பெண் அமைச்சரான தேசிய கட்சியின் துணைத்தலைவர் Bronnie Taylor, தொடர்ந்து பெண்கள் மேம்பாடு மற்றும் மனநல துறை அமைச்சராக நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாகாண சுகாதார துறை அவருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

Cabinet reshuffle ahead of 2023 election in New South Wales. Premier Dominic Perrottet..பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பெரும்பாலான அமைச்சர்களை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவும் புதிதாக பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்வதும் இந்த அமைச்சரவை மாற்றத்தின் முக்கிய நோக்கம் என்று நியூ சவுத் வேல்ஸ் மாகாண ப்ரீமியர் Dominic Perrottet தெரிவித்துள்ளார். முழுவதும் Merit அடிப்படையில் தேர்வு தீய பட்டுள்ள இந்த அமைச்சரவை மாகாணத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கும் என்று தான் நம்புவதாகவும் பிரீமியர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரத்தில் தற்போதைய புதிய அமைச்சரவை அனுபவமற்றவர்களை கொண்டது என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதனை பிரீமியர் Dominic முற்றிலும் மறுத்துள்ளார்.

முன்னாள் பிரிமியர் Gladys பதவி விலகிய போது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 6 பெண்கள் பதவி விலகினர். இந்நிலையில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் 26 பேரில் ஏழு பெண்கள் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளனர்.

Link Source: https://ab.co/3H0XQJA