கபே, உணவகங்கள், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், அழகு நிலையங்கள், கடைகள் உள்ளிட்டவைகளில் பணிபுரிபவர்கள் 100% தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்றும், வீட்டில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் அவர்கள் பணி புரிவதற்கும் சென்று வருவதற்குள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் வெளியிடங்களில் ஒன்று கூடுவதற்காக பத்திலிருந்து முப்பது நபர்கள் வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் 106 நாட்களுக்குப் பிறகு தற்போது வணிக நிறுவனங்கள் திறக்கப்படுவதால் தாங்கள் மிகுந்த உற்சாகத்துடனும், அதே நேரத்தில் அச்சத்துடனும் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பெருந்தொற்று காலத்தில் முடக்க நிலை காரணமாக வியாபாரம் பெருமளவு வீழ்ச்சியை சந்தித்ததாகவும், அதற்கு முன்னதாக தங்களது வர்த்தகம் சிறப்பான முறையில் சென்று கொண்டிருந்ததாகவும் உணவக உரிமையாளர் David Bregg கூறியுள்ளார்.
தங்கள் வங்கி சேமிப்புகள் முழுவதையும் இழந்த நிலையில் பெருமளவு கடன்களோடு தற்போது மீண்டும் வர்த்தகத்தை தொடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என்றும்
David Bregg குறிப்பிட்டுள்ளார். மேலும் பெருமளவு மக்கள் கூடும் உணவக அமைப்புகளை தவிர்த்துவிட்டு சிறிய அளவிலான உணவகங்களை மட்டுமே தற்போது திறப்பதாகவும், பெரும்பாலும் ஆன்லைன் மற்றும் தொலைபேசி வழியாக ஆர்டர்கள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய சூழலில் வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவது மிகுந்த உற்சாகத்தையும் அதேநேரம் அச்சத்தையும் தங்களுக்கு அளித்திருப்பதாகவும் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதே தனது விருப்பம் எனவும் David Bregg தெரிவித்துள்ளார். உணவகங்கள் மற்றும் மதுபான பார்களுக்கு வரும் நபர்களை தடுப்பூசி செலுத்தியவர்கள் என்பதை பரிசோதிப்பதில் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும், தற்போதைய சூழலில் பெரும் லாபத்தை எதிர்பார்த்து வர்த்தகத்தை நடத்த இயலாது என்றும் உணவக உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
இதேபோன்று உடற்பயிற்சி நிலையங்களில் மிக அதிக அளவிலான முன்பதிவுகள் கிடைக்க பெற்றிருப்பதாகவும், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர்களை உரிய முறையில் ஒழுங்கு படுத்துவதற்கான நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொண்டு வருவதாகவும் ஜிம் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நிதி பற்றாக்குறை உள்ளிட்ட விவகாரங்களில் தங்கள் சிக்கித் தவித்து வருவதாகவும், உடற்பயிற்சி கூடங்களுக்கு அந்த வாடகையை கூட செலுத்த முடியாத நிலையில் கடந்த சில மாதங்களாக தங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ள நிலைகள் 11ம் தேதி திங்கட்கிழமை முதல் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. இதனையடுத்து அங்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் உற்சாகமாக பணிகளுக்கு திரும்ப தயாராகி வருகின்றனர்.
Link Source: https://bit.ly/2YCcAgK