Breaking News

26 வயதுடைய நபருக்கு ஏற்பட்ட தொற்று Princess Alexandra மருத்துவமனையுடன் தொடர்புடையது !

பிரிஸ்பனின் உள்வடக்கு பகுதியில் உள்ள 26வயதுடைய நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், 13 நாட்களில் Queenslandல் கண்டுபிடிக்கப்பட்ட முதல் தொற்றாக கருதப்படுகின்றது.

Brisbane case is linked to Princess Alexandra Hospital cluster 1இவருடைய மரபணு சோதனையில் இவருக்கு UK strain மாறுபாடு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இது Princess Alexandra மருத்துவமனை மருத்துவர் மற்றும் வெளிநாட்டு பயணிகளின் மரபணு சோதனையுடன் ஒத்து போனதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் பிரிஸ்பனில் கொரோனா தொற்று அதிகம் பரவியுள்ளதாக தெரிகிறது.

அதிகாரிகள் இந்த நபருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பதை ஆராய்ந்து வருகிறார்கள். அந்த நபர் தனிமைப்படுத்தபட்டு தற்போது Brisbane and Women’s மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிரிஸ்பனின் பல பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இப்பகுதியில் உள்ளவர்களுக்கு யாரேனும் உடல்நிலை சரியில்லாமல் போனால் ,உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Jeannette young australiaமுதன்மை சுகாதார அதிகாரி Jeannette Young கூறுகையில், அந்த நபருக்கு தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பதை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். இதன் விபரம் அடுத்த 24 மணி நேரத்தில் தெரியும் என்றார். அதற்கிடையில் பொது சுகாதார எச்சரிக்கை பகுதிக்கு யாராவது சென்று வந்தால் பரிசோதனை செய்து பரிசோதனை முடிவு வரும் வரை தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் கூடுதல் பரிசோதனை மையங்களை அதிகப்படுத்தி உள்ளோம் என்றார்.

மற்ற மாநிலம் மற்றும் territories Queenslandல் இந்த தொற்றால் எங்கெங்கு பாதிப்பு உள்ளது என்பதை கவனித்து வருகிறது. விக்டோரியா, Brisbane மற்றும் Moreton Bay ஐ ஆரஞ்சு பகுதியாக அறிவித்துள்ளது. அப்பகுதியிலிருந்து விக்டோரியா வருபவர்கள் கட்டாயம் அனுமதி பெற்று கொரோனா பரிசோதனை நெகட்டிவ் என்று வரும் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது.

Tasmania, மேற்கு ஆஸ்திரேலியா, தெற்கு ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளிலிருந்து யாரேனும் Brisbane, Moreton Bay-விற்கு சென்று வந்தாலும் கோவிட் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.