Breaking News

சிட்னியில் பிளாகாய்டு ஆஸ்திரேலியா அமைப்பினர் கைது..!!

போராடுவதற்கான எதிரான சட்டத்தில் பிளாகாய்டு அமைப்பைச் சேர்ந்த 10 பேர் கைது.

BlockAde Australia arrested in Sydney

குற்றம் உறுதிசெய்யப்படும் பட்சத்தில் 2 ஆண்டுகள் தண்டனையும் 22 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்பு

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போராடுவதற்கு எதிரான சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

ஆஸ்திரேலியாவில் இயங்கி வரும் சூழலலியல் அமைப்பான ’பிளாகாய்டு ஆஸ்திரேலியா’ பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டங்களை நாடு முழுவதும் முன்னெடுத்து வருகிறது. சிட்னியில் முகாமிட்டு இந்த அமைப்பினர், கடந்த ஞாயிறு காலை துறைமுக சுரங்க சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

BlockAde Australia arrested in Sydney,நட்ட நடு சாலையில் நின்று அவர்கள் போராடியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை அவர்களை கைது செய்தது. துறைமுக சுரங்க சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மட்டுமில்லாமல், பல்வேறு விபத்து நடப்பதற்கு போராட்டக்கார்கள் காரணமாக இருந்துள்ளனர். இதுதொடர்பாக சி.சி.டி.வி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு , 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரை ஆடையாளம் காண சி.சி.டிவி-யில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் துணை ஆய்வாளர் பால் டஸ்டன் தெரிவித்தார்.

தற்போது அவர்கள் மீது போராட்டத்துக்கு எதிரான சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய ஆணையர் டஸ்டன், ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டு வருவதாக கூறினார். இவர்கள் மீதான் குற்றம் உறுதி செய்யப்பட்டால் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 22000 டாலர் அபராதமும் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.