Breaking News

பூட்டானில் 60% மக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளதால், அதிக கொரோனா தடுப்பூசிகள் செலுத்திய நாடுகளில் 6 ஆம் இடத்தில் பூட்டான் உள்ளது.

பூட்டான் இமயமலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு சிறிய நாடு. இந்நாட்டின் மன்னராக Jigme Khesar Namgyel Wangchuck உள்ளார்.
இந்நாட்டின் மக்கள் தொகைதொகை சுமார் 7,50,000. இவர்களில் 4,78,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 60% ஆகும்.

Dasho Dechen Wangmoஇது குறித்து கருத்து தெரிவித்த பூட்டான் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் Dasho Dechen Wangmo மக்களின் ஒத்துழைப்புடனும், அரசரின் வழிகாட்டுதல் காரணமாக இந்த இலக்கை எட்டமுடிந்ததாக தெரிவித்துள்ளார். கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இந்தியாவில் இருந்து நன்கொடையாக வழங்கப்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார். கடந்த மார்ச் கடைசி வாரத்தில் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் பூட்டான் வந்து சேர்ந்ததாகவும், அதனை சுமார் 1200 முகாம்கள் மூலமாக மக்களுக்கு செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bhutan is the 6th most vaccinated country in the world, with 60% of the population being vaccinated against corona. 2சிக்கலான நில அமைப்பை உடைய பூட்டான் நாட்டில் தொலை தூரங்களில் வசிக்கக்கூடிய மக்களுக்கும் கொரோனா தடுப்பூசியை கொண்டு சேர்த்ததில் சுகாதாரத்துறை பணியாளர்கள் பங்கு மிக முக்கியமானது. கார்கள் பயணிக்க முடியாத இடங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் சுமார் 12 மணி நேரம் நடந்தே பயணித்ததாக சுகாதாரத்துறை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தடுப்பூசி குறித்த சந்தேகங்கள் தோன்றும் போது உள்ளூர் அரசு பிரதிநிதிகள் தாமாக முன்வந்து தடுப்பூசியை செலுத்திக்கொண்டதாகவும், இதன் மூலம் மக்களின் நம்பிக்கையை பெறமுடிந்ததாகவும் சுகாதாரத்துறை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Bhutan is the 6th most vaccinated country in the world, with 60% of the population being vaccinated against coronaகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிய நிலையில், பூட்டானில் இதுவரை 1000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா பரவல் அச்சத்தால் கடந்தாண்டு தன் சர்வதேச எல்லையை மூடிய பூட்டான், நாட்டுக்குள் வரும் அனைவரும் 21 நாட்கள் தனிமைபடுத்துதலுக்கு பிறகே
அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.