Breaking News

கருக்கலைப்பு குறித்து தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, தனது எதிர்க்கட்சி கொறடா பதவியை விட்டு விலகியுள்ளார் பெர்னி ஃபின்.

Bernie Finn has stepped down from his post as opposition leader, following opposition to his comments on abortion.

விக்டோரியா மாநிலத்தின் லிப்ரல் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் பெர்னி ஃபின். அம்மாநிலத்தின் மேலவை உறுப்பினராக கடந்த 2006 தேர்வு செய்யப்பட்டார். அடுத்தடுத்து அந்த தொகுதியில் நடைபெற்று தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிபெற்று செல்வாக்குமிக்கவராக மாறினார்.

கடந்த 2018- ஆண்டு முதல் எதிர்க்கட்சியின் கொறடா பதவியை அவர் வகித்து வந்தார். இந்நிலையில் அமெரிக்க உச்சநீதிமன்றம் கருக்கலைப்பு செய்வது குற்றம் என்று தீர்ப்பளிக்கும் என எதிர்பார்ப்பதாக தன்னுடைய ஃபேஸ்புக்கில் சில நாட்களுக்கு முன்பு குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பெர்னி ஃபின் சார்ந்துள்ள கட்சியைச் சேர்ந்தவர்களே எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தேர்தல் நேரத்தில் ஃபின் தெரிவித்துள்ள கருத்து தோல்விக்கு வழிவகுக்கும் என்று லிப்ரல் கட்சி கருதியது. இதன் காரணமாக அவரை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

கருக்கலைப்பு குறித்து பேசிய சில நாட்களில் தனது எதிர்க்கட்சி கொறடா பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளது. முன்னதாக சமூகவலைதளங்களில் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை கூறிவிட்டு விவாதத்தில் சிக்குவது பெர்னி ஃபினின் வழக்காக இருந்தது. அதை தொடர்ந்து தான் லிப்ரல் கட்சி அவரை கொறடா பதவியில் இருந்து விடுவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.