ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக விசாரணை நடைபெற்று வருகிறது. சிட்னி நீதிமன்றத்தில் ஆஜராகி சிப்பாய்கள் பலர் வாக்கு மூலம் அளித்து வருகின்றனர்.
அதில் எண் 7 என்ற புனைப்பெயர் கொண்ட மூத்த சிப்பாய் ஒருவர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அவர் Roberts Smith தனது போர்க் குற்றங்களையே போர்க்கால சாதனைகளாக மாற்றும் வகையில் செயல்பட்டதாகவும், சிறிதும் இரக்கமன்றி கொலை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் சாட்சியம் அளித்துள்ளார். மேலும் நடைபெற்ற அனைத்தையும் ஆஸ்திரேலிய மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
போர்க்களத்தின் ஹீரோவாக அழைக்கப்படும் Ben Roberts Smith, கையில் ஆயுதங்கள் இல்லாத நபரை விரைந்து தூக்கிலிட்டதாகவும், மற்றொரு நபரின் மரணத்திற்கு குறுகிய காலத்தில் உத்தரவிட்டதாகவும் தன் மீதான குற்றங்களை மறைக்க அவர் புனைக்கதைகளை கூறி வருவதாகவும் சிப்பாய் ஒருவர் முன்னதாக நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தார்.
2009 ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் சிறப்பு படை வீரராக பணி புரிந்த மற்றொரு வீரர், ஆயுதங்கள் எதுவும் இல்லாத ஆப்கனை காலடியில் வைத்து புதிய வீரர் ஒருவரை சுடச் சொல்லி உத்தவிட்டதாகவும் கூறப்படுகிறது.
Ben Robert Smith வழக்கறிஞரால் சிட்னி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சாட்சியம் விஸ்கி 108 என புனைப்பெயர் கொண்ட நபர் ஆவார். அவர், ஆப்கானிஸ்தானில் தாலிபான் வளாகத்தின் மீதான தாக்குதல் தொடர்பான புகார்களை அவர் முற்றிலும் மறுத்தார்.
அதே நேரத்தில் சிப்பாய்கள் தங்களது நலனுக்காகவும் அச்சுறுத்தல் காரணமாகவும் பல்வேறு உண்மைகளை வெளியில் சொல்லாமல் தவிர்த்து வருவதாகவும், இதன் காரணமாக தேவையற்ற குற்றச்சாட்டுக்கள் எழுவதை தவிர்க்க முடியாது என்றும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது. Ben Roberts Smith உளவியல் ரீதியாக சில பிரச்சனைகளை கொண்டு இருந்ததாகவும், அதன் காரணமாக சிப்பாய்களை அவர் கொடூரமாக கையாண்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகள் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது சாட்சியங்கள் கூறும் விவரங்களை வெளியிடக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவிட் கால விடுமுறைக்குப் பின்னர் சிட்னி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரப்பட்டுள்ள நிலையில் அனைத்து சாட்சியங்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் படைத் தளபதிகளின் செயல்பாடுகள் குறித்த அனைத்து நடவடிக்கைகளையும் பதிவு செய்ய இருப்பதாகவும், அப்பாவிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Link Source: https://bit.ly/3qknzGN