Breaking News

பெலாரஸ் அரசுக்கு எதிராக போராட்டத்தை ஒருங்கிணைந்த சமூக ஆர்வலர் Raman Pratasevich பயணம் செய்த விமானத்தை நடுவானில் கடத்தி அவரை கைது செய்ததாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் Lukashenko மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கிரீஸ் நாட்டில் இருந்து லித்துவேணியா நாட்டின் விலனியஸ் நகரத்திற்கு rayanair பயணிகள் விமானத்தில் Pratasevich பயணம் செய்துக்கொண்டிருந்தார். பெலாரஸ் நாட்டின் வான் வெளிபரப்பில் பறந்துக்கொண்டிருந்த இந்த பயணிகள் விமானத்தை பெலாரஸ் அதிபர் Lukashenko உத்தரவின் பேரில் மிக் 29 ரக விமானம் இடைமறித்து தலை நகர் மின்ஸ்க் விமான நிலையத்தில் தரையிரங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானப்படை துணை கமெண்டர் Andrei Gurtsevich பயணிகள் விமானத்தின் குழுவே மின்ஸ்க் நகரத்தில் தரை இறக்கியாயதாக தெரிவித்துள்ளார். ஆனால் விமானம் கட்டாயப்படுத்தி தரையிரங்கியதாக லித்துவேணியா அதிபர் Gitanas Nauseda தெரிவித்துள்ளார்.

Belarusian President Alexander Lukashenko has been arrested on suspicion of hijacking a plane carrying social activist Raman Pratasevich.,இது ஒரு சர்வதேச விதிமீறல் என்றும் , பயணிகள் விமானத்தை போர்விமானங்கள் மூலமாக இடைமறித்து வலுக்கட்டாயமாக தரையிறக்கப்பட்டதாக லித்துவேணியா, போலந்து போன்ற நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. மேலும் ஜெர்மனியும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

பெலாரஸ் மீது ஏற்கனவே பொருளாதார கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில் , இதை தீவிரப்படுத்த வேண்டும் என்று சர்வதேச நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

விமானம் பெலாரஸ் நாட்டுக்கு திருப்பப்படுவதாக விமானி அறிவித்ததும், தங்களுக்கு பின்னால் இருந்த Pratasevich அச்சமுற்றதாகவும் சக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Roman Protasevich கைது செய்யப்பட்டுள்ளதாக பெலாரஸ் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Roman துணை நிறுவனராக உள்ள இந்த telegram செயலியை தடை செய்தது மட்டுமில்லாமல் , அவர் மீது தீவிரவாதத்தை துண்டியதாக குற்றக்காட்டும் பெலாரஸ் சுமத்தியுள்ளது.

Link Source: https://ab.co/348GkBJ