Breaking News

முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் தீவிரவாத அமைப்புக்கு தடை !

Ban on terrorist organization for the first time in Australia

UK-based Sonnenkrieg Division (SKD)-யை ஒரு பயங்கரவாத அமைப்பாக முறையாக பட்டியலிடப்படுவதால், ஆஸ்திரேலியா far-right extremist group-ஐ முதன்முறையாக தடை செய்ய உள்ளது. பாதுகாப்பு நிறுவனமான ASIO வின் பரிந்துரைப்படி neo-Nazi குழுவை தடை செய்வதாக உள்துறை அமைச்சர் Peter Dutton உறுதிப்படுத்தியுள்ளார்.

Ban on terrorist organizationUS-based Atomwaffen-ஐ சேர்ந்த Far-right extremist குழு இங்கிலாந்தில் ஏற்கனவே இருந்த சட்டவிரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டு, அதனுடைய உறுப்பினர்கள் பயங்கரவாத குற்றங்களுக்காக சிறை அடைக்கப்பட்டுள்ளனர்.

Mr. Dutton, எதிர்கட்சி தலைவர் Anthony Albanese மற்றும் மாநில தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்தகுழுவை பயங்கரவாத (தீவிரவாத) அமைப்பு என்று பட்டியலிட கூறினார். யாரேனும் வன்முறையை தூண்டுவதற்கு முன்பாக அதை தடுக்கும் முறையில் ஏற்படுத்தப்பட்ட நடைமுறை நடவடிக்கையாகும். அவர்கள் தடைசெய்யப்பட்ட குழு இல்லை என்றால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கடினம். அவர்களை ஊக்குவிப்பதையோ, அவர்களை ஆட்சேர்ப்பு செய்வதையோ நிறுத்த வேண்டும் என்றார்.

ஆஸ்திரேலியாவில் இதுவரை 27 தீவிரவாத குழுக்கள் உள்ளன. ASIO போன்ற பாதுகாப்பு நிறுவனங்களின் அறிவுரையின்பேரில் இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. SKD ஆஸ்திரேலியாவுடன் நேரடியாக தொடர்பு என்ற நம்பிக்கை இருந்தாலும்,ஆஸ்திரேலியாவில் தீவிரவாத செயல்கள் இருப்பதால் இவர்கள் காரணமாக இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. ஆனால் இந்த குழு பயங்கரவாதத்திற்கு துணை போனதாகவும், ஆன்லைன் பிரசாரத்தில் UK தீவிரவாதிகளுக்கு பயிற்சியளித்ததாகவும் கூறப்படுகிறது.

எந்த ஒரு தீவிரவாத குற்றங்களுக்கும் அல்லது அதற்கு துணையாக இருப்பவர்களுக்கும் 25 வருட சிறைத்தண்டனை உண்டு. Five-Eyes intelligence network-ல் ஆஸ்திரேலியா மட்டுமே இருந்தது. இன்னும் ஒரு தீவிரவாத குழுவை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

இதைப்பற்றி Kristina கூறுகையில்,இந்த தீவிரவாத கும்பல் தங்களுடைய குழுவுக்கு ஆட்கள் சேர்ப்பதிலும், எங்கும் தீவிரவாதத்தை பரப்புவதிலும் கவனமாக செயல்படுகிறது. மோரிசன் அரசாங்கத்திற்கு என்னுடைய கேள்வி. இதைப்போல ஆஸ்திரேலியாவில் உள்ள மற்ற தீவிரவாத அமைப்புகளும் தடை செய்யப்படுமா? என்பதே என்று கேள்வி எழுப்பினார்.

proud boysகனடா கடந்த மாதம் Proud Boys என்ற தீவிரவாத அமைப்பை தனது பட்டியலில் தடை செய்த முதல் நாடாகும். இதை தங்கள் நாட்டை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளுமாறு ஆஸ்திரேலியாவிற்கு அழைப்பு விடுத்தனர் Canadian civil rights குழுவினர்.

ASIO வின் செய்தி தொடர்பாளர், தீவிரவாத குழுக்கள், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை உருவாக்குகிறது. முன்பு இருந்ததை விட அவர்கள் அதிநவீன பாதுகாப்பு உடையதாக இருக்கிறது. துரதிஷ்டமாக ஆஸ்திரேலிய இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இளம் வயதிலேயே தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதைப்பற்றி பாராளுமன்ற குழு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான சட்டமாற்றங்கள் குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.