Breaking News

மோசமான வானிலை -மேற்கு சிட்னி மக்கள் வீட்டை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் எச்சரிக்கை !

மேற்கு சிட்னியில் உள்ள மக்கள், வெள்ளத்திலிருந்து தங்களை காப்பாற்றி கொள்ள வீட்டை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Hawkesbury மற்றும் Nepean ஆறுகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால் Greater Syndey ல் வசிப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க 10 வெளியேறும் அறிவிப்புகள் SES அறிவித்துள்ளது. மேலும் கால்வாய்க்கு அருகில் உள்ள Penrith மற்றும் Blacktown பகுதியில் உள்ளவர்கள் தங்கள் வீட்டை விட்டு உயர்வான இடத்திற்கு சென்றனர்.

Bad weather vulnerability -Authorities warn people in western Sydney to leave their homes 1மற்ற புறநகர் பகுதியில் இருப்பவர்கள் எந்த நேரத்திலும் வெளியேற தயாராக இருக்குமாறு அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கையால் மக்கள் தூக்கம் இல்லாமல் தவிக்கின்றனர். Greater Syndeyயின் மேற்கு பகுதியில் உள்ள Hawkesbury மற்றும் Nepean ஆறுகளின் உயரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை இல்லாத அளவு வெள்ளம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் கூறுகையில், சிட்டினியின் மேற்குபகுதியில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திங்கள் முதல் அதிகரித்த மழை ,செவ்வாயன்றும் அதிக அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது. வெள்ள நீரின் அளவு உயர்ந்துள்ளதால் அங்கு வசிப்பவர்கள் வெளியேறுமாறும் கூறப்பட்டுள்ளது.

Bad weather vulnerability -Authorities warn people in western Sydney to leave their homes 3Pitttown Bottom, Cornwallis, Freemans Reach, Gronos Point ஆகியவற்றில் வசிக்கும் மக்களுடன் சேர்த்து வடக்கு Richmond ல் உள்ளவர்களும் வெளியேறு உத்தரவிட்ட நிலையில் ,தற்போது Hawkesbury யும் வெள்ளத்தில் மூழ்கியது. Nepean ஆறும் 12 மீட்டருக்கு மேல் இரவிற்குள் தனது உச்சநிலையை எட்டும் என அஞ்சப்படுகிறது.

Penrithன் சாலைகள் ஏற்கனவே தண்ணீரில் மூழ்கியுள்ளது. 1961ம் ஆண்டில் ஏற்பட்ட அழிவைப்போல் மீண்டும் Hawkesbury பாதிக்கப்படலாம் என்று அங்கு இருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளநீர் தொடர்ந்து உயர்ந்து வருவதால் அது பிற்பகலில் 15.6 மீ உயரத்தை எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Bad weather vulnerability -Authorities warn people in western Sydney to leave their homes 4Freemans Reachல் வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட 10 பேரை விமானம் மூலம் மீட்புக்குழு காப்பாற்றியது. Windsorல் வசிப்பவர்கள் புதிதாக கட்டப்பட்டுள்ள வெள்ள தடுப்பு பாலத்தை காணலாம். வெள்ளத்தால் அடித்து வரும் குப்பைகள் இந்த பாலத்தை சேதப்படுத்தலாம் என்ற கவலையும் அங்கு நிலவி வருகின்றது.

இது குறித்து மாநிலமுதல்வர் Gladys Berejiklian கூறுகையில், சிட்டினியில் வெள்ளம் 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பதாகும். மேலும் 4000 மக்கள் வரை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்படலாம் என்று கூறினார்.