Breaking News

குயின்ஸ்லாந்தில் அதி வெப்பமண்டல சூறாவளி தரையை நெருங்குவதன் காரணமாக நிலவும் மோசமான வானிலை : அனைத்து கடற்கரைகளையும் மூடியது மாகாண அரசு

குயின்ஸ்லாந்தில் உள்ள பிரபலமான சுற்றுலா பகுதிகளான கடற்கரைகளுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்த நிலையில், அதி வெப்ப மண்டலச் சூறாவளி தரைப்பகுதியை நெருங்குவதன் காரணமாக அனைத்து கடற்கரைகளும் மூடப்படும் என்று குயின்ஸ்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

Bad weather in Queensland as tropical cyclone approaches land. Provincial government closes all beaches.குயின்ஸ்லாந்து மாகாணத்தை ஒட்டிய அனைத்து கடற்கரைகளும் உடனடியாக மூடப்படுவதாகவும் சூறாவளி காரணமாக மிக மோசமான வானிலை நிலவுவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் சூறாவளி காரணமாக அலைகள் 9 மீட்டர் உயரத்திற்கு எழுவதால் அந்த பகுதியில் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடலோர பாதுகாப்பு படைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது குயின்ஸ்லாந்து மாகாண அரசு தெரிவித்துள்ளது.

Bad weather in Queensland as tropical cyclone approaches land. Provincial government closes all beaches,,.Cold Coast, Sunshine Coast, Fraser island உள்ளிட்ட பகுதிகளுக்கு அபாயகரமான எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அலைகளின் வேகம் மற்றும் உயரம் காரணமாக பாதிப்புகள் அதிகமாக ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் கரையை ஒட்டி வசிக்கக்கூடிய மக்கள் உடனடியாக தங்கள் வாகனங்கள் மற்றும் உடமைகளை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லுமாறும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இடையே சூறாவளி காரணமாக கடற்கரைகள் மூடப்பட்டதால் ஆர்வமுடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. குயின்ஸ்லாந்து மாகாணத்தின் பிரபலமான சுற்றுலா கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒட்டி களைகட்டி இருக்கும் ஆனால் வெப்பமண்டல சூறாவளி காரணமாக விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை சுற்றுலாப்பயணிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

Link Source: https://ab.co/34jvkES