Breaking News

சர்ச்சை வீடியோக்களால் ஏற்பட்ட பின்னடைவு : சம்மந்தப்பட்ட வீடியோக்களை நீக்க ஆஸ்திரேலிய அரசு ஒப்புதல்

Backlash caused by controversial video Australian government approves deletion of related videos

மத்திய அரசாங்கம் 7.8 மில்லியன் டாலர் முதலீட்டில் கடந்த வாரத்தில் தொடங்கப்பட்ட ‘தி குட் சொசைட்டி’ இணைய தளமே சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது.

பாலியல் ரீதியாகவும், உறவுகளை புண்படுத்தும் விதமாகவும் வீடியோக்கள் ‘தி குட் சொசைட்டி’ தளத்தில் பதிவேற்றம் செய்யப்படதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அவை தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

சமூகத்தில் குழப்பத்தை ஏற்டுத்தும் வகையிலான வீடியாக்கள் குறித்து வழக்கறிஞர்கள், பெண்ணுரிமை அமைப்புகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Dr Michele Brunigesபங்குதாரர்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து எழுந்த கருத்துகளுக்கு மதிப்பளித்து சம்மந்தப்பட்ட வீடியோக்களை நீக்கியுள்ளதாகவும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உதவும் வகையில் 350 வீடியோக்கள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி, வேலைவாய்ப்புத்துறை செயலாளர் Dr Michele Bruniges கூறியுள்ளார்.

அதே நேரம், இனி வரும் நாட்களில் வீடியோக்களை நிபுணர் குழுவின் பார்வைக்கு உட்படுத்தி ஒப்புதல் பெற்ற பின்னரே பதிவேற்றம் செய்யப்படும் டாக்டர். மைக்கேல் குறிப்பிட்டுள்ளார்.

Backlash caused by controversial video Australian government approves deletion of related videos.Moving the Line Basics என்ற தலைப்பில் 10 முதல் 12 வயது மாணவர்களுக்காக பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவில், பெண் ஒருவர் தனது ஆண் நண்பரிடம் தான் தயாரித்த மில்க்‌ஷேக்கை சுவைத்துப் பார்க்குமாறு கேட்கிறார். சுவைத்துப் பார்க்கும் ஆண் நண்பர் தான் தயாரித்த மில்க்‌ஷேக்கே நன்றாக இருப்பதாகவும் இது நன்றாக இல்லை என்றும் கூறுகிறார். உடனே அந்தப் பெண் மில்க்‌ஷேக்கை அந்த ஆண் நண்பரின் முகத்தில் அவரின் அனுமதியின்றி ஊற்றிவிடுகிறார். இதுவே நீக்கப்பட்ட ஒரு வீடியோவில் ஒன்றாகும்.

மற்றொரு வீடியோவில், தண்ணீரில் இருக்கும் சுறா மீன்களுக்கு பயந்து நீச்சலடிக்காமல் காத்திருக்கும் பெண்ணை கட்டாயப்படுத்தும் நபரை அவரது ஆண் நண்பர் துப்பாக்கியை வைத்து மிரட்டுவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது.

Backlash caused by controversial videosபிரிஸ்பேனை சேர்ந்த தனியார் டிஜிட்டல் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் தி குட் சொசைட்டி இணைய தளத்தில், மாணவர்களின் தன்னம்பிக்கை, செயல்பாடுகள் பழக்க வழக்கங்களை நல்வழிப்படுத்தவும், பாலின பாகுபாடு இன்றி சமமாக பழகவும் போதிக்கும் வகையிலான வீடியோக்கள் பதிவு செய்யப்படுகிறது. இவை சமூகத்தில் நிகழும் பாலியல் மற்றும் குடும்ப வன்முறைகளை தடுத்து நிறுத்த உதவி புரியும் என்று கூறப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வீடியோக்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும், மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் மாநில கல்வி அமைச்சர் கூறியுள்ளார். மேலும், விகாரமான காட்சிகளை உள்ளடக்கிய இவை உரிய தரத்தை எட்டும் வகையில் இல்லை என்றும் மொத்தத்தில் இது மிகப்பெரும் தோல்வி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இனிவரும் நாட்களில் இதுபோன்று நிகழாத வண்ணம் நிபுணர் குழுவின் ஆய்வுக்குப் பின்னர் உரிய ஒப்புதலை பெற்றே வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படும் என கல்வித்துறை உறுதி அளித்துள்ளது.