Breaking News

தடுப்பூசி போட்டுக்கொண்ட குடிமக்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்பலாம் என்று நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளதை அடுத்து, ஆஸ்திரேலியாவின் கம்பிளித் தொழில்துறை முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Australia's wool industry is paralyzed after the New Zealand government announced that vaccinated citizens could return home.

ஆஸ்திரேலியாவின் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா மாநிலத்தில் செம்மறி ஆடுகளில் இருந்து கம்பளித் தயாரிக்கும் தொழில் முதன்மையாக விளங்குகிறது. இங்கு கம்பிளி உற்பத்தியில் பணியாற்றும் தொழிலாளர்களில் 60 விழுக்காட்டுக்கும் அதிகாமானோர் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

Australia's wool industry is paralyzed after the New Zealand government announced that vaccinated citizens could return home..இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெளிநாடுகளில் இருந்து தாய் நாட்டுக்கு திரும்பலாம் என நியூசிலாந்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கம்பளி உற்பத்தி தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஆனால் உற்பத்தியாளர்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர். குறிப்பாக வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவில் கம்பளித் தொழில் செய்து வரும் வணிகர்கள் ஒவ்வொருவரும் தங்களிடம் இருந்து 6 முதல் 8 பணியாளர்களை இழக்க நேரிடும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு நேரும் பட்சத்தில், அம்மாநிலத்தில் கம்பளி உற்பத்தி தொழில் பெரியளவில் முடங்கும்.

ஆஸ்திரேலியா நாட்டுச் சட்டப்படி ஒவ்வொரு செம்மறி ஆடுகளிடம் இருந்து 4 முதல் 6 வாரங்களில் முடி அகற்றப்பட வேண்டும். தற்போது தொழிலாளர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பும் பட்சத்தில் விலங்கு நலனுக்கான உத்தரவை மீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழும். இதனால் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா கம்பளி உற்பத்தியாளர்கள் அரசு இவ்விவகாரத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Link Source: https://ab.co/35NzQfr