Breaking News

ஆஸ்திரேலியாவின் விண்வெளி திறனை அமெரிக்காவுக்கு இணையாக உயர்த்த வேண்டும் : பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் விண்வெளி திறன் மேம்பாட்டு மாநாட்டில் பேச்சு

ஆஸ்திரேலியாவின் ஸ்பேஸ் கமாண்ட் நிலையம் அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்க உள்ளதாகவும், விண்வெளி திறன் மேம்பாட்டில் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் முன்னணியில் உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் கூறியுள்ளார்.

இதன் காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான போட்டியில் அமெரிக்காவுக்கு நிகரான விண்வெளி திறனை ஆஸ்திரேலியா ஏற்படுத்த வேண்டும் அதற்கான நிதி ஒதுக்கீடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் விண்வெளி திறன் மேம்பாட்டு மாநாட்டில் பீட்டர் டட்டன் உரை ஆற்றினார்.

ரஷ்யா, சீனா ஆகியவை மணிக்கு 6 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ஹைப்பர் சோனிக் வகை ஏவுகணைகளை தயாரித்து வருவதாகவும், மிகவும் நெருக்கடியான நிலையில் பல்வேறு நாடுகள் தங்களது விண்வெளி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.

Australia's space capability must be upheld by US. Defense Minister Peter Dutton speaks at the Space Capacity Development Conference.எதிர்காலத்தில் விண்வெளி தொடர்பான தேவைகளை நிறைவேற்றும் வகையிலான நடவடிக்கைகளுக்கு தற்போதை புதிய ஸ்பேஸ் கமாண்ட் நிலையம் உதவிகரமாக இருக்கும் என்றும், 2019ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் உடனான கூட்டு ஒப்பந்தத்தில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டதாகவும் இது தேசிய அளவிலான நலன் காக்கும் திட்டமாகவும் இருக்கும் என்றும் பீட்டர் டட்டன் உறுதி அளித்துள்ளார்.

ஒரே நிலைப்பாட்டை கொண்ட நாடுகளுடன் இணைந்து செயல்படுவது மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் சர்வதேச விதிமுறைகளின் அடிப்படையில் பல்வேறு விண்வெளி திட்டங்களை செயல்படுத்துவதில் ஆஸ்திரேலியா முனைப்புடன் இருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறியுள்ளார். இது போன்ற முந்தைய நடவடிக்கைகளில் ஆஸ்திரேலியா நீண்ட காலமாக சிறப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அது வெற்றி பெற்றுள்ளதாகவும் பீட்டர் டட்டன் கூறியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் மீதான போரில் ரஷ்யா ஹைப்பர்சோனிக் வகை ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருவதை குறிப்பிட்ட அமைச்சர், எதிர்கால திட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விண்வெளி தொடர்பான செயற்கைக் கோள் மற்றும் போர் நடவடிக்கைகள் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் மீதான போர் காரணமாக ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் உலக அளவில் பரவி வருவதாகவும், இதனை முன்னெச்சரிக்கையாக கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் உரிய திட்டங்களை செயல்படுத்த வேண்டியது அவசியமாகிறது என்றும் பீட்டர் டட்டன் விண்வெளி திறன் மேம்பாட்டு மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3ttW7s4