Breaking News

ஆஸ்திரேலியாவில் திக்குமுக்காடும் ரியல் எஸ்டேட்- விழிபிதுங்கும் சாமானியர்கள்..!!

அதிகளவிலான வட்டி மற்றும் விண்ணை முட்டும் அளவில் நிலத்தின் மதிப்பு உயர்ந்து வருவதை அடுத்து, நாடு முழுவதும் ரியல் எஸ்டேட் துறை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

Australia's real estate boom - waking common man

கார்லாஜிக் என்கிற தரவுகளை சேகரிக்கும் நிறுவனம் ஆஸ்திரேலியாவின் ரியல் எஸ்டேட் குறித்து ஆய்வு மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் ஜூன் மாத முடிவில் ரியல் எஸ்டேட் துறை 0.6 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களிலும் ரியல் எஸ்டேட் துறை மோசமான வீழ்ச்சியை கண்டுள்ளது. சிட்னியில் 1.6 சதவீதமும், மெல்பேர்னில் 1.1 சதவீதமும், ஹோபார்ட் பகுதியில் 0.2 சதவீதமும், விக்டோரியாவின் உள்ளூர் பகுதிகளில் 0.1 சதவீதமும் ரியல் எஸ்டேட் இறங்கு முகத்தை கண்டுள்ளது.

Australia's real estate boom - waking common man.அதிகரித்து வரும் பணவீக்கத்தை சரிகட்ட, கடந்த மே மற்றும் ஜூன் மாதத்தில் ரிசர்வ் வங்கி வட்டிகளை உயர்த்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதனால் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் பல்வேறு துறைகளில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் ரியல் எஸ்டேட் வீழ்ச்சி பாதைக்கு சென்றுகொண்டிருக்கும் அதேவேளையில், ஆஸ்திரேலியாவின் குறிப்பிட்ட நகரங்களில் நிலங்களின் மதிப்பு கடுமையாக உயர்ந்து வருகிறது. அதன்படி அடிலேய்டில் 1.3 சதவீதமும், டார்வினில் 0.9 சதவீதமும் பெர்த்தில் 0.4 சதவீதமும் கான்பெர்ராவில் 0.3 சதவீதமும் பிரிஸ்பேனி 0.1 சதவீதமும் நிலத்தின் மதிப்பு அதிகரித்துள்ளது. விலை குறைந்து காணப்படும் பகுதிகளில் உரிமையாளர்கள் நிலங்களை விற்பதாக இல்லை. விலை அதிகரித்து காணப்படும் இடங்களில் பொதுமக்கள் வாங்கும் நிலைமையில் இல்லை.

இதற்கிடையில் வாடகை வீட்டில் வசிப்போரின் பணவீக்க நடவடிக்கையால் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தனிநபர் ஒருவர் கடந்தாண்டை விட, நடப்பாண்டில் 0.9 சதவீதம் கூடுதல் வாடகை பணம் செலுத்துகிறார். இதனால் ஆண்டுக்கு 9.5 சதவீதம் பணத்தை வாடகைக்கு மட்டும் அவர் செலவு செய்யவேண்டியதாக உள்ளது.

சாமானியர்கள் சொந்தமாக வீடு வாங்க முடியாமலும், வாடகைக்கு இருக்க முடியாமலும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு புரிதலுக்குட்பட்டு பொருளாதார கொள்கையை வகுக்கும் பட்சத்தில் இந்த நிலையை கடந்து வரலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கு சாமானியர்களின் வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.