Breaking News

ஆஸ்திரேலியாவில் பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு பதவி இடங்களை அதிரடியாக நிரப்பி வரும் பிரதமர் ஸ்காட் மோரிசன் : முன்னாள் லிபரல் அமைச்சர்கள் முக்கிய பொறுப்புகளில் நியமனம்

ஆஸ்திரேலியாவில் காலியாக இருந்த நீதிபதிகள், குழு தலைவர்கள், அரசு நிறுவனங்களுக்கான தலைவர்கள் உள்ளிட்ட பொறுப்புகளை இடங்களை அதிரடியாக அறிவித்து வருகிறார் பிரதமர் ஸ்காட் மோரிசன்.

Australia's Prime Minister Scott Morrison to fill various vacancies ahead of general election. Former Liberal ministers appointed to key positions.நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை மையமாக வைத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பிரதமர் ஸ்காட் மோரிசன், மேற்கண்ட காலி இடங்களுக்கு முன்னாள் லிபரல் அமைச்சர்கள், தலைவர்கள் உள்ளிட்ட நபர்களை தேர்வு செய்து பணி நியமனம் வழங்கியுள்ளார். இன்னும் சில வாரங்களில் பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தொடர்ந்து மக்கள் மீதான அக்கறை கொள்ளும் நடவடிக்கையாக சிலவற்றை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் காலியாக இருந்த நீதிபதி பதவி இடங்கள், குழுத் தலைவர்கள் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர் பதவிகள் உள்ளிட்டவற்றை வேகமாக நிரப்பி வருகிறார்.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் முன்னாள் அமைச்சர் Don Harwin, அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அவருக்கு ஆஸ்திரேலிய கவுன்சில் போர்டு தலைவராக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று உத்தி கடந்த முறை தேர்தலுக்கு முன்பாக கையாள பட்டதாகவும், அதையே தற்போதும் பிரதமர் ஸ்காட் மோரிசன் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Australia's Prime Minister Scott Morrison to fill various vacancies ahead of general election. Former Liberal ministers appointed to key positions,மாகாணத்தின் முன்னாள் லிபரல் கட்சி அரசியல்வாதி Michaelia Cash, ஆஸ்திரேலியாவின் நிர்வாக மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆண்டுக்கு 5 லட்சம் டாலர் வரை ஊதியம் பெரும் பதவியில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று பெரும்பாலான அரசியல் தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கி பிரதமர் ஸ்காட் மோரிசன் உத்தரவிட்டுள்ளார். அதில் பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கி மத்திய நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான முக்கிய தலைவர்களை நியமிக்க வேண்டிய சூழல் இருப்பதாகவும், மீதமுள்ள பொறுப்புகளை புதிய அரசாங்கம் உரிய முறையில் நிறைவேற்றும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/37ksIrT