Breaking News

ஆஸ்திரேலியாவின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தம் விமர்சனங்களையும், வரவேற்ப்பையும் பெற்றுள்ளது.

அமெரிக்கா-ஆஸ்திரேலியா-பிரிட்டன் நாடுகளுக்கிடையே அன்மையில் ஏற்பட்ட அக்கூஸ் ஒப்பந்தம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் மூலமாக அணு சக்தி மூலமாக இயங்கும் நீர்மூழ்கி கப்பல் தொழில் நுட்பத்தை ஆஸ்திரேலியாவிற்கு வழங்க இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்த ஒப்பந்த குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஆஸ்திரேலியாவின் எதிர்கால பாதுகாப்புக்கும், பிராந்தியத்தில் நிலவும் அசாதாரண சூழ் நிலையை சமாளிக்க சில தேவைகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெர்வித்துள்ளார். அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் மிக அவசியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதே நேரம் ஆஸ்திரேலியா அணு ஆயுதத்தை கொள்முதல் செய்ய வில்லை என்றும் விளம்மகளித்துள்ளார்.

Australia's nuclear submarine deal has received rave reviews..இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ள லோவி கல்வி நிறுவனத்தின் இயக்குனர், Sam Roggeveen , இது மிகப்பெரிய ஒப்பந்தம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு நீண்ட காலத்திற்கு உறுதி செய்ய முடியுமா என்ற கேள்விக்கும் நாம் விடை தேடவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்ததம் இறுதி செய்யப்பட்டதால், பிரான்ஸுடன் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட 90$ பில்லியன் மதிப்பு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால், ஆஸ்திரேலியாவிற்கு 2.4$ பில்லியன் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஒப்பந்ததை கொள்கையளவில் ஆதரித்துள்ள லேபர் கட்சியின் நிர்வாகியும் முன்னாள் பிரதமருமான பால் கீட்டீங், இந்த ஒப்பந்தம் வாயிலாக ஆஸ்திரேலியா அமெரிக்காவை சார்ந்து இயங்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஒப்பந்தம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள ஆடம் பாண்ட், சீனாவுடனான பதற்றத்தை தனிப்பதை விட, இது மேலும் அதிகமாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Australia's nuclear submarine deal has received rave reviewsஅணு சக்தி நீர்மூழ்கி கப்பல்களால் ஆஸ்திரேலியாவின் நகரங்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு செல்லும் என்றும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார். மேலும் சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட கருத்தில், ஆஸ்திரேலியா அமெரிக்க பிரிட்டன் நாடுகள் பனி போர் மன நிலையில் இருந்து வெளிவர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. அதே நேரம் நீர் மூழ்கி கப்பல் ஒப்பந்த ரத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம்., இந்த ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியா தங்களை முதுகில் குத்திவிட்டதாகவும் , சர்வதேச உறவில் இது மோசமான முன்னுதாரனம் என்று பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் Jean-Yves Le Drian, குறிப்பிட்டுள்ளார்.

Link Source: shorturl.at/pGKW2