Breaking News

ஆஸ்திரேலியாவின் Ellume நிறுவனத்தின் ரேபிட் ஆன்டிஜென் கருவி முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டதை தொடர்ந்து சுமார் 2 லட்சம் கருவிகளை அந்த நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவில் ,பிரிஸ்பேனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரக்கூடிய உயிரித் தொழில்நுட்ப நிறுவனம் Ellume. இந்த நிறுவனம் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தாங்களாகவே சுயபரிசோதனை செய்து கொள்ளக்கூடிய கொரோனா ரேபிட் ஆன்டிஜன் பரிசோதனைக் கருவியை தயாரித்து வருகிறது .

இந்த நிறுவனத்தின் பரிசோதனை கருவிக்கு அமெரிக்க அரசி எப்.டி.ஏ ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு முதல் அமெரிக்காவிற்கு Ellume நிறுவனத்தின் ராபிட் ஆண்டின் பரிசோதனைக் கருவி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

Australia's Ellume has recalled about 2 lakh devices following a glitch in its Rapid antigen tool resultsஅமெரிக்க அரசுக்கும் இந்த நிறுவனத்திற்கும் இடையே சுமார் 300 மில்லியன் டாலர் மதிப்பீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதுவரைக்கும் இந்த நிறுவனம் 35 லட்சம் ரேபிட் ஆண்டிஜென் பரிசோதனை கருவிகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. அண்மையில், இந்த நிறுவனத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட சில பரிசோதனை கருவிகளின் முடிவுகளில் தவறுகள் நிகழ்வதாக தெரியவந்தது.

குறிப்பாக பொது மக்களுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு விற்கப்பட்ட இந்த பரிசோதனை கருவிகள் தவறுதலாக முடிவை தெரிவித்துள்ளது. தொற்று இல்லாத நபர்களுக்கு பாசிட்டிவ் என்று முடிவு வந்துள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு சுமார் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பரிசோதனை கருவிகளை திரும்பப் பெறுவதற்கு அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அந்த குறிப்பிட்ட பேட்ஜில் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து பரிசோதனை கருவிகளும் திரும்பப் பெறுவதற்கு முடிவு செய்திருப்பதாக Ellume நிறுவனம் தெரிவித்துள்ளது .

இது ஒட்டு மொத்த ஏற்றுமதியில் ஒரு ஒரு சதவீதத்திற்கும் குறைவே என்று கூறும் எனும் நிறுவனம் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது .

Australia's Ellume has recalled about 2 lakh devices following a glitch in its Rapid antigen tool results.ஆஸ்திரேலியாவில் ரேபிட் பரிசோதனை கருவிகளுக்கு தற்போது வரைக்கும் அனுமதி வழங்கப்படாவிட்டாலும், நவம்பர் 1 முதல் அதனை பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய மருத்துவ பொருள் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது . இதற்காக 33 நிறுவனங்களுக்கு அனுமதி கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூக்கில் உள்ள சளி மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ராபிட் ஆன்டிஜென் பரிசோதனை கருவிகள் செயல்படும். இதை பொதுமக்கள் பயன்படுத்தி 20 நிமிடங்களுக்குள்ளாகவே முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும் .

Ellume நிறுவனம் 450 பணியாளர்களுடன் இயங்கி வருகிறது.

Link Source: https://ab.co/3abBI0v