Breaking News

கான்பெர்ராவில் அமையும் ஆஸ்திரேலியாவின் போதை மருந்து சோதனை தளம்..!!

ஆஸ்திரேலியாவின் முதல் அரசு நடத்தும் மருந்து சோதனை தளத்தில் கான்பெர்ரா இலவச மாத்திரை பரிசோதனையை வழங்கவுள்ளது.

Australia's drug testing site to be set up in Canberra

சிறிய அளவிலான கோகோயின், ஹெராயின் மற்றும் எம்.டி.எம்.ஏ மீதான தடைகளை நீக்க கான்பெர்ரா தயாராகி வருகிறது. அதற்காக ஆஸ்திரேலியா நடத்தி வரும் மருந்து சோதனை தளத்தில் கான்பெர்ரா மாத்திரை பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. ஆறு மாதம் மட்டுமே மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை வெறும் போதை பொருள் தடுப்பு மட்டும் இல்லாமல், பாலியல் மற்றும் மனநலம் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளன.

Australia's drug testing site to be set up in Canberra.இந்த சோதனை மையங்கள் மூலம் 15 நிமிடங்களில் மாத்திரைகள் மீது சோதனை நடத்திவிட முடியும். அவற்றில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் அல்லது அபாயமான தாதுகள் இருப்பது தெரியவந்தால் மருந்துகள் பறிமுதல் செய்யப்படாது. ஆனால் பயனர்கள் போதைப் பழக்கத்தை கைவிட வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுதொடர்பாக பேசிய ஆஸ்திரேலிய தலைநகர் பிரதேசத்திற்கான சுகாதாரத் துறை அமைச்சர் ரேச்சல் ஸ்டீபன் – ஸ்மித், வரும் ஜனவரி 21-ம் தேதி இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. போதைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்கள், சட்டவிரோதமான போதைப் பொருட்களில் உள்ள அறியப்படாத மற்றும் ஆபத்தான பொருட்களைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள இந்த நடவடிக்கை உதவும் என்று கூறினார்.