Breaking News

தடுப்பூசி ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியத் திட்டம் இருந்தாலும் ஆஸ்திரேலியாவின் COVID-19 தடுப்பூசி பிரச்சனையாகவே இருக்கின்றது !

ஐரோப்பா ஆணையம் அந்நாட்டு ஒன்றியத்தில் இருந்து Covid-19 தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்தும் திட்டத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளது, மேலும் அதன் சொந்த விநியோகங்களுக்கு உத்தரவாதம் அளிக்க அவ்வாறு செய்ய வேண்டும் என கூறி வருகிறது.

Covid-19 தடுப்பூசி ஏற்றுமதியில் ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான விதிகளை கூறியுள்ளதால், சுகாதார அமைச்சர் Greg Hunt ஆஸ்திரேலியாவின் தற்போதைய கொரோனா வைரஸ் தடுப்பூசி அட்டவணையை pfise மற்றும் Astrazeneca-வுடன் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் கட்டுப்பாடுகள் ஐரோப்பிய ஒன்றிய மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், மருந்துகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு முன்பு ஒப்புதல் பெறுவதையும் உறுதி செய்கின்றன.

திரு Hunt-ன் செய்தி தொடர்பாளர் சனிக்கிழமையன்று ஒரு அறிக்கையில் கூறியதாவது, பிப்ரவரி மாதத்திற்கு பின் பைசர் தடுப்பூசியை வெளியிட தொடங்குவதற்கு அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் மேலும் ஆரம்பத்தில் 80,000 doses அளவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

மார்ச் மாதத்தில் 1.2 மில்லியன் Astrazeneca-வின் சர்வதேச டோஸ் அளவுகள் வழங்கப்படும் என சமீபத்திய ஆலோசனைகள் தெரிவிக்கின்றன. மேலும் அந்த செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்தக் கணிப்புகள் ஏற்கனவே பைசர் மற்றும் Astrazeneca-வின் உலகளாவிய சவால்களை கணக்கில் எடுத்துக் கொள்கின்றன, எனக் கூறினார்.

ஆஸ்திரேலியாவின் சப்ளை உறுதி செய்யப்படுவதாகவும், CSL மற்றும் Astrazeneca உடனான உள்நாட்டு உற்பத்தி ஒப்பந்தத்தால் செயல்படுவதாகவும்,மேலும் மார்ச் மாத இறுதியில் இதனை கொடுப்பது தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உறுதியளித்ததுபடி, தடுப்பூசி மாதிரிகளை வழங்க தவறியதற்காக ஐரோப்பிய ஒன்றியம் Astrazeneca-வை மிகவும் பகிரங்கமாக கண்டித்தது. முதல் காலாண்டில் 60 சதவீதம் வரை பற்றாக்குறை உள்ளது. மேலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் எதிர்பார்த்ததை விட குறைவான பைசர் மற்றும் Moderna தடுப்பூசி விநியோகங்களை பெற்றுள்ளது.

நார்வே, சுவிட்சர்லாந்து மற்றும் மேற்கு பால்கன் மற்றும் வட ஆப்பிரிக்காவின் நாடுகள் உட்பட ஏராளமான ஐரோப்பிய ஒன்றிய அண்டை நாடுகளுக்கும் மற்றும் ஏழை நாடுகள் என வடிவமைக்கப்பட்ட COVAX -க்கும் நன்கொடை விலக்கு அளிக்கப்படும்.

மருந்து தயாரிப்பாளர்கள் தடுப்பூசி உருவாக்கப்படும் ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் ஏற்றுமதி அங்கீகாரம் பெறவேண்டும். அந்த நாடு ஒரு முடிவை எடுக்க இரண்டு வேலை நாட்களில் கலந்து ஆலோசிக்கும். இந்த நடவடிக்கையை அத்தியாவசிய தடுப்பூசி வினியோக சங்கிலியை சுரண்டும் பிற நாடுகளின் பதிலடி நடவடிக்கைகளை தூண்டுவதாக சர்வதேச வர்த்தகம் தெரிவித்துள்ளது. மேலும் இதன் நடவடிக்கையை ஏற்கனவே விமர்சனத்தின் கீழ் வந்துள்ளது.