Breaking News

அதிபர் தேர்தலில் வாக்களிக்க ஆஸ்திரேலியா வாழ் சிலி நாட்டு மக்களுக்கு அனுமதி : இறுதிச் சுற்று வாக்குப்பதிவின் முடிவில் அதிபர் யார் என்பது தெரிய வரும்.

Australia's Chile allowed to vote in presidential election. The final round of voting will determine who the president is.

சிலி நாட்டில் அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான முதற்கட்ட தேர்தல் நவம்பர் மாதம் நடந்து முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வாக்களிக்க ஆஸ்திரேலிய வாழ் சிலி நாட்டு மக்களுக்கு முதன் முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் சில சமூகத்தினர் அவர்களுக்கான உரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது வாக்களிப்பதற்கான அங்கீகாரம் முதன் முறையாக அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Australia's Chile allowed to vote in presidential election. The final round of voting will determine who the president is..களத்தில் Progressive கட்சியின் Gabriel Boric மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் Jose Antonio ஆகியோருக்கிடையே அதிபருக்கான போட்டி அதிகரித்துள்ளது. முதல் சுற்று வாக்குப்பதிவு நவம்பர் மாதம் நடந்து முடிந்த நிலையில் பெரும் தொற்று காரணமாக தேர்தல் தாமதமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது இறுதிச்சுற்று வாக்குப்பதிவில் ஆஸ்திரேலிய வாழ் சிலி மக்கள் வாக்களிப்பதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

சிட்னியில் நடைபெற்ற வாக்குப்பதிவில் குடும்பத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பேரும் இரு வேறு துருவங்களில் இருந்து வந்தவர்கள் என்றும், அவர்கள் பல்வேறு விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய தேவை இருப்பதால் அதிபராக வெற்றி பெறுபவருக்கு மிகப்பெரிய சவால்கள் காத்திருப்பதாக ஆஸ்திரேலிய வாழ் சிலி மக்கள் கூறியுள்ளனர்.

Australia's Chile allowed to vote in presidential election. The final round of voting will determine who the president isஇருவரும் வெவ்வேறு விவகாரங்களில் கவனம் செலுத்தக் கூடியவர்கள் என்றும், அவர்களுக்கான வெற்றி வாய்ப்புகள் சம அளவில் இருந்து வருவதாகவும் தேர்தலை கண்காணித்து வரும் நடுவர் குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய வாழ் மக்கள் முதன் முறையாக தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ள நிலையில் சிலியில் உள்ள தங்கள் குடும்பத்தினரை கருத்தில் கொண்டு அவர்கள் வாக்களிக்க வேண்டும் என்றும், அந்த வாக்குகள் அவர்களது குடும்பத்தினரின் வாழ்க்கையை மாற்றுவதற்கான வாய்ப்பு என்றும் நடுவர் குழு தெரிவித்துள்ளது.

Link Source: https://bit.ly/3ea5V28