Breaking News

சாலமன் தீவில் அமைதியை நிலைநாட்டும் ஆஸ்திரேலியாவின் முயற்சி முறியடிக்கப்பட்டு வருகிறது.

சாலமன் தீவுகளில் அமைதி காக்கும் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்ட 40 பேரை விரைவில் நாடு திரும்புவார்கள் என ஆஸ்திரேலியா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது

Australia's attempt to maintain peace on Solomon Islands is being thwarted..தென்பசிபிக் பெருங்கடலில் நூற்றுக்கணக்கான தீவுகளை கொண்ட நாடு சாலமன் தீவுகள். கடந்த 2019-ம் ஆண்டு பிரதமராக மானசே சோகவரே பதவியேற்ற பின்பு தைவானுடனான தூதரக உறவை துண்டித்துக் கொண்டார். அதற்கு பதிலாக சீனாவுடன் தூதரக உறவை அவர் ஏற்படுத்தினர். இதற்கு எதிர்க்கட்சிகள், பொதுமக்கள், அரசியல் விமர்சகர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு மாகாண அரசுகள் இம்முடிவை ஏற்க மறுத்தன. பிரதமர் மானசே சோகவரே பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

Australia's attempt to maintain peace on Solomon Islands is being thwartedஇதை அடுத்து ஃபிஜி, ஆஸ்திரேலியா, பாபுவா நியூ ஜீனியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் இருந்து 200 பேர் சாலமன் தீவுகளில் அமைதி காக்கும் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த 40 பேர் மீண்டும் தாய் நாட்டுக்கு திரும்பவுள்ளனர். அதற்கு பதிலாக சாலமன் தீவுகளில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் போலீசாருடன் சேர்ந்து ஆஸ்திரேலிய ராணுவம் ஈடுபடும் என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி அந்நாட்டில் பாதுகாப்பு, தகவல் தொடர்பு, தளவாடங்கள் மற்றும் விமான இயக்கம் உள்ளிட்ட தேவைகளை ஆஸ்திரேலியா ராணுவம் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Link Source: https://bit.ly/3ySbjQK