ஆஸ்திரேலியாவில் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகளில் இல்லாமல் தனிவீட்டில் வசிப்பவர்களில் 30 சதவீதத்தினர் மேற்கூரை சோலார் பேனல்கள் மூலம் மின்சார வசதி பெறுகின்றனர். வரும் 2050-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 65 சதவீதமாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
மின்சார பயன்பாட்டுக்கான வரி விதிப்பு மற்றும் கட்டணம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதை சமாளிக்க முடியாமல் பலரும் சூரிய மின்சார ஆற்றலுக்கு மாறி வருவது தெரியவந்துள்ளது. குடியிருப்பு பகுதிகளில் கட்டண விவரங்களை பகிர்ந்துகொண்டு, பலரும் சூரிய தகடுகள் மூலம் மின்சார வசதி ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். மேலும் சூரிய மின்சார உற்பத்தியை பயன்படுத்த விரும்புபவர்களுக்கு அரசும் உதவித்தொகை வழங்குகிறது. அதன்மூலம் பொதுமக்கள் சூரிய மின் தகடுகள் மற்றும் பேட்டரிக்களை வாங்கிட முடியும். ஆனால் அவை சந்தர்ப்பவாத விற்பனை யுக்திகளையும் வீட்டுக்காரர்களுக்கு இடர்பாடுகளையும் ஏற்படுத்துவதாக ஒரு சிலர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.